மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஜி.எஸ்.டி. வரித் தாக்கல் அவகாசம் நீட்டிப்பு!

ஜி.எஸ்.டி. வரித் தாக்கல் அவகாசம் நீட்டிப்பு!வெற்றிநடை போடும் தமிழகம்

ஜூலை - நவம்பர் மாதங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30ஆம் தேதி வரையில் மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஜூலை மாதத்துக்கான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியும் டிசம்பர் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் மத்திய நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

முன்பு, ஜூலை - நவம்பர் மாதங்களுக்கான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் அக்டோபர் 30ஆம் தேதியாகவும், ஜூலை மாதத்திற்கான வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்பர் 10ஆம் தேதியாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதிகளை நீட்டிப்பதன் மூலம் 30.81 லட்சம் வரி செலுத்துவோர் பயனடைவார்கள் என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. நீட்டிக்கப்பட்ட கடைசித் தேதிகள் அடங்கிய அரசின் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் உயர்மட்டக் குழுவின் கூட்டம் ஒன்று அக்டோபர் 29ஆம் தேதியன்று டெல்லியில் நடைபெற்றது. மாநில நிதியமைச்சர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்திற்கு அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமை வகித்தார். வரி இணக்கத்தின் மீது வரி செலுத்துவோருக்கு உள்ள சுமையைக் குறைக்கவும், வரி செலுத்துவதை எளிதாக்கவும் சில மாற்றங்களை இக்குழு பரிந்துரைத்துள்ளது. உணவு விடுதிகள் மீதான சுமையைக் குறைக்கவும் சில திருத்தங்களை இக்குழு பரிந்துரைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon