மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

மழை என்றால் அம்மா தானே: அப்டேட் குமாரு

மழை என்றால் அம்மா தானே: அப்டேட் குமாருவெற்றிநடை போடும் தமிழகம்

தொடர்ந்து ரெண்டு நாள் மழை பேஞ்ச உடனே உசுரு போகுற அளவுக்கு சென்னை மக்கள் பதறுறாங்களே.. இந்த புகழ் எல்லாம் நடு ராத்திரி ஏரியை திறந்துவிட்ட அந்த அம்மாவுக்கு தானே போய் சேரும். இன்னைக்கு மட்டும் இல்ல இந்த தலைமுறைக்கே மழையை கண்டா அவங்க முகம் தான் ஞாபகத்துக்கு வரும். சும்மாவா சொன்னாங்க அம்மா நாமம் வாழ்கன்னு. மழை தொடர்ச்சியா பெய்யுதோ இல்லையோ நிவாரணப்பொருள்களை கொடுப்பாங்களோ இல்லையோ இந்நேரத்துக்கு ஸ்டிக்கர் அடிக்க ஒரு குரூப் சிவகாசி போயிருக்கும். ஆமா இந்த தடவை யார் போட்டோவை போடுவாங்க. பழனிசாமியும் பன்னீர் செல்வமும் சிரிச்ச மாதிரி இருக்குற போட்டோ தானே. நல்லதுங்க. அப்புறம் அமைச்சர்களை மிஞ்சுற அளவுக்கு இங்க ஒரு குரூப் வாட்ஸப்ல வந்து அலப்பறையை கூட்டுது. போன வெள்ளத்துக்கு வந்த போட்டோவையும் அவசர உதவி நம்பர்களையும் ஷேர் பண்ணிட்டு இருக்காங்க. அதுல ஒரு மெசேஜ், மவுண்ட் ரோட்டில் வெள்ளத்தில் சிக்கியவர்கள் சத்யம் தியேட்டருக்கு வரவும்னு போட்ருக்கு. ஒருவேளை மெர்சல் இந்த வார கலெக்‌ஷனுக்கு ஆள் சேர்க்காங்களோ? தலையில அடிக்காம அப்டேட்டை பாருங்க

Boopathy Murugesh

தண்ணி போக வேண்டிய ஆத்துல மணல் லாரிய ஓட விட்டான் மனுசன்..

லாரி போக வேண்டிய ரோட்ல மழை தண்ணிய ஓட விடுது இயற்கை..

நீ பற்றவைத்த நெருப்பொன்று..

சி.பி.செந்தில்குமார்‏

2015 மழை வேறு இப்போது பெய்துவரும் மழை வேறு மக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் வேலுமணி

ஆனா அப்ப இருந்த அதே அதிமுக ஆட்சிதானே?அதான் பயம்

தமிழச்சி

2015 மழை வேறு இப்போது பெய்துவரும் மழை வேறு மக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் வேலுமணி

ஒரு வேல அந்த 6 வித்தியாசத்தை கண்டுபிடிச்சுருப்பாரோ

மாஸ்டர் பீஸ்

டெங்கு எங்க போனதே தெரியவில்லை,

தமிழக அரசு ஒழித்துவிட்டது.

-சீனிவாசன்

ஒரு பிரச்சனைய யாரும் பேசலைனா அத ஒழிச்சாச்சுனு அர்த்தமில்ல அமைச்சரே!

தி.புகழேந்தி

அமெரிக்காவை விட கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது-வேலுமணி

சாந்தா என்ற மூதாட்டி நீரில் விழுந்து பலி

2017ChennaiRains

அ ல் டா ப் பு

எக்ஸாம் எப்படி எழுதியிருக்கேன்னு நண்பனிடம் கேட்டேன்,

மெர்சலா எழுதியிருக்கேன்னு சொல்றான்.

காப்பியடிச்சு எழுதியிருக்கான்போல.

amudu

டெங்குவை ஒழிக்க முடியாததால், ஒளிக்க முயல்கிறார்கள்.

சி.பி.செந்தில்குமார்‏

கர்நாடக தலைமைச்செயலகத்தில் எலிகளைப் பிடிக்க ரூ.1.50 கோடி செலவு:

50 பூனைகளை வாங்கிப்போட்டிருந்தா அம்புட்டு காசும் மிச்சம்

Boopathy Murugesh

வட இந்தியர்களிடம் தமிழர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும் உறவுகளே..

கொஞ்சம் ஏமாந்தாலும் பானிப்பூரிக்காரன் 5 பூரி வச்சுட்டு 6 முடிஞ்சதுன்னு சொல்றான்..

சரவணன்

எல்லா பிரச்சனையையும் பேசியே தீர்க்கலாம்னு பேசிக்கிட்டு இருக்கும்போதே அடுத்த பிரச்சனை வந்து அந்த பக்கம் போய்விடுகிறோம்.

amudu

இந்த வருடமாவது நல்லா மழை பெய்யனும் என்று விவசாயிகளை விட, ரோடு காண்ட்ராக்ட்காரர்களே அதிகம் வேண்டிக் கொள்கிறார்கள்.

கிரியேட்டிவ்

வாழ்க்கையை ஆசைப்பட்டு வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஆசைப்பட்டதாலேயே அவஸ்தைப்பட்டு நிக்கும் பலரும் இருக்க தான் செய்கிறார்கள்.

எனக்கொரு டவுட்டு

டெங்குவிற்கு பிறகு கொசு உற்பத்தில தமிழகம் முதலிடம்னு அறிவிப்பு வராம இருக்குறது ஆச்சர்யம் அளிக்கிறது..!!

நாயோன்‏

எல்லாம் முடிந்துவிட்டது

எதனுடைய தொடக்கம்

இதுவென அறிவதற்குள்

இதுவும் முடிந்திருக்கும்.

பிரியா

டெங்கு எங்க போனதே தெரியவில்லை,

தமிழக அரசு ஒழித்துவிட்டது.

-சீனிவாசன்.

B4 பஸ் பிடித்து மறுபடியும் டெல்லி சென்று விட்டது. இனி அடுத்த வருடம் ..

அர்ஜூன்

சென்னை மக்கள் வெள்ளம் குறித்து பயப்பட வேண்டாம் - டெல்லியில் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

நீங்கதான் பயந்துட்டீங்க இத டெல்லிபோய்ட்டு சொல்றீங்களே

நாயகன்

கலைஞரின் இனிய தமிழை கேட்க ஆவலாக இருக்கின்றேன் -பொன்.ராதா

பேச ஆரம்பிச்சதும் இந்து விரோதி, ஆண்ட்டி இன்டியனு பட்டம் தந்துடலாம்னு ப்ளானிங்கா?

கருப்பு கருணா

ஒரு ஆஸ்பத்திரி நர்சும் ஆயாம்மாவும் நினைத்தால் ஒங்க சாதியே மாறிடும் தெரியுமா...

ஆண்ட பரம்பரையாம்...

நக்கல் மன்னன் 2.0

பலூனில் அதிமுக விளம்பரம் - செய்தி

பேனர் வைகக கூடாதுலமாற்று வழியில யோசிககிறாங்களாம்

சென்னை வெள்ளத்துக்கு இந்த தடவை பலூன் தான் போல

Boopathy Murugesh

சென்னையும் மழையும்,

முதல் நாள் : கிளைமேட்டு

2வது நாள் : கொசு பேட்டு

3வது நாள் : ரெய்ன் கோட்டு

10வது நாள் : ஸ்பீடு போட்டு

-லாக் ஆஃப்

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon