மின்னம்பலம்
தமிழகத்தில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஓரிரு நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் காலியிடங்களுக்குத் தேர்வு நடத்தி ஆறு மாதங்களில் முடிவுகளை அறிவிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பலர்,குரூப் 1, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளை எழுதி வேறு பணிகளுக்குச் சென்றுவிடுகின்றனர்.இதனால், இந்தப் பணியில் காலியிடங்கள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்திவருகிறது.
தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.