மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 25 பிப் 2020

நடைப்பயிற்சிக்குக் கட்டணம்!

நடைப்பயிற்சிக்குக் கட்டணம்!

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளை நாளை (நவம்பர் 1) முதல் பொதுமக்கள் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் விளையாட்டு திடல்கள் (ஸ்டேடியம்) அமைக்கப்பட்டு பல்வேறு விளையாட்டு திறன்கள் வளர்க்கப்படுகின்றன. சென்னை உள்ளிட்ட சில இடங்களில் உள்விளையாட்டு அரங்குகளும் உள்ளன. திறந்தவெளி விளையாட்டு மைதானத்தில் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் கைப்பந்து கால்பந்து, பேட்மிட்டன், கூடைப்பந்து விளையாட்டுகள் காலை மற்றும் மாலை நேரங்களில் விளையாடி வருகின்றனர். அவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிப்பதற்காக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பல்வேறு வசதிகளைச் செய்துள்ளது.ஆனால் தற்போது விளையாட்டு மையங்கள் நிதி கிடைக்காமல் சரியாகப் பராமரிக்கப்படுவதில்லை. மேலும், விளையாட்டு மைதானத்தினை பொதுமக்களும் பயன்படுத்தி வருகிறார்கள். நடைப்பயிற்சி, உடல் பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நாளை (நவம்பர் 1) முதல் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் விளையாட்டு அரங்குகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விளையாட்டு மையத்தைப் பராமரிப்பதற்காக மாதம் 250 ரூபாய் முதல் 1100 ரூபாய் வரை வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட விளையாட்டு அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.இதற்கு விளையாட்டு வீரர்கள், நடைப்பயிற்சி சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon