மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 29 மே 2020

தீவிரமடைகிறது பருவ மழை!

தீவிரமடைகிறது பருவ மழை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதாகச் சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று (அக்டோபர் 31) சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இலங்கை அருகே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தற்போது மன்னார் வளைகுடாவில் மையம் கொண்டுள்ளது. இதனால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு பரவலாக மழை பெய்யும். வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னையைப் பொறுத்தவரை இன்று மாலைக்குப் பிறகு மழை தொடங்கும் எனத் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கனமழையும், 16 இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது. அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ மழையும், பரங்கிப்பேட்டையில் 26 செ.மீ மழையும், செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ மழையும், சென்னை விமான நிலையத்தில் 17 செ.மீ மழையும், அண்ணா பல்கலைக்கழகத்தில் 15 செ.மீ மழையும், கேளம்பாக்கத்தில் 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon