மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

ரயில்வே: அபராதம் வாயிலாக ரூ.11 கோடி வசூல்!

ரயில்வே: அபராதம் வாயிலாக ரூ.11 கோடி வசூல்!

ஆன்லைனில் சில அதிகாரபூர்வமற்ற ஏஜெண்டுகள் ரயில் டிக்கெட்டுகளைச் சட்ட விரோதமாக மென்பொருள் மூலம் மொத்தமாகப் பதிவு செய்து வைத்துக்கொள்வதாகவும், அந்த டிக்கெட்டுகளைக் கள்ளச் சந்தையில் விற்பதாகவும் புகார்கள் எழுந்துவந்தன. இவர்களைக் கட்டுப்படுத்த மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தீபாவளிப் பண்டிகையின்போது ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த நபர்களிடமிருந்து சுமார் 11 கோடி ரூபாய்க்கும் அதிகமானத் தொகையை மத்திய ரயில்வே துறை அபராதமாக வசூலித்துள்ளது.

ரயில்வே பாதுகாப்புப் படையும், வர்த்தகம் மற்றும் கண்காணிப்புத் துறையும் இணைந்து நடத்திய சோதனைகளில் கள்ளச் சந்தையில் வாங்கப்பட்ட ரயில் டிக்கெட்டுகள் சிக்கியுள்ளன. பி.டி.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள ஒரு கடையில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.80,750 மதிப்புள்ள 21 டிக்கெட்டுகள், ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகள், ரூ.45,750 ரொக்கம், 58 பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள், கணினி சி.பி.யூ, ஹார்ட் டிஸ்க், ரசீதுப் புத்தகம் மற்றும் பிற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இக்கடையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரே மாதத்தில் 1.15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 ஆன்லைன் ரயில் டிக்கெட்டுகள் அதிகாரபூர்வமற்ற ஏஜெண்டுகளிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த ஏஜெண்டுகள் மீது ரயில்வே சட்டம் பிரிவு 143இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon