மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

முதல்வர் ஆய்வு!

முதல்வர் ஆய்வு!வெற்றிநடை போடும் தமிழகம்

சேலம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (அக்.31) நடைபெற்றது.

சேலம் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அரசுத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூடம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது. சேலத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார்.

பருவமழை பாதிப்பை சமாளிப்பதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ரோஹிணி, மாநகர ஆணையர் சங்கர், சுகாதாரத் துறை அதிகாரிகள், பொதுப்பணித் துறை அதிகாரிகள், உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

முன்னதாக, சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள ஆய்வு மாளிகைக்குச் சென்ற முதல்வர் பழனிசாமி, பொதுமக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon