மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

2.O வதந்தி: ரஜினி கருத்து!

2.O வதந்தி: ரஜினி கருத்து!

மின்னம்பலம்

2.O படத்தின் வெளியீடு சம்பந்தமாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக 2.O படத்திற்கு பின்னரே காலா வெளியாகும் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் 2.O படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் வில்லன் வேடம் ஏற்றுள்ள பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் ஆர்.பால்கி இயக்கியுள்ள பத்மன் திரைப்படம் அதற்கு மறுநாள் ஜனவரி 26ஆம் தேதி வெளிவரவுள்ளதாக இரு தினங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

இதனையடுத்து, 2.O படத்தின் வெளியீட்டு தேதி ஏப்ரல் மாதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பத்மன் படம் ஜனவரி 26 அன்று வெளியாகவுள்ளதாகவும் சில ஊடகங்களில் செய்தி வெளியாகின. ஆனால், ஏப்ரல் மாதத்தில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் காலா வெளியாகும் என்ற அறிவிப்பும் முன்பே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்படி 2.O படம் வெளியீட்டுத் தேதி குறித்துக் குழப்பம் உருவானது.

இந்நிலையில், 2.O படத்தின் இசை வெளியீட்டுக்காக துபாய் சென்றிருந்த ரஜினி நேற்று (அக்டோபர் 30) இரவு சென்னை திரும்பினர். அப்போது சென்னை விமான நிலையத்தில் அவரிடம் 2.O திரைப்படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதா, காலா படம் முதலில் வெளியாகுமா என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அவர், “காலா படத்திற்கு முன் 2.0 படம் வெளியாகும்” என்று கூறியுள்ளார்.

இதுவரை 2.O வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்து இதுவரையில் எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon