மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

ரகுல் Vs சோனாக்‌ஷி: விஜய்க்கு ஜோடி யார்?

ரகுல் Vs சோனாக்‌ஷி: விஜய்க்கு ஜோடி யார்?

மெர்சல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ரகுல் ப்ரீத் சிங், சோனாக்‌ஷி சின்ஹா இடையே போட்டி நிலவுகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் இதற்கு முன்னதாக நடித்த துப்பாக்கி, கத்தி படங்கள் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் உருவாக உள்ள மூன்றாவது படம் பற்றிய பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் அதிகம் பேசப்படுகிறது. முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஸ்பைடர் படத்தில் நடித்திருந்த ரகுல் விஜய்க்கு ஜோடியாக நடிப்பார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இப்போது பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா பெயரும் அடிபடுகிறது. ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான சோனாக்‌ஷி ஏற்கனவே முருகதாஸ் இயக்கத்தில் பாலிவுட்டில் அகிரா, ஹாலிடே ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் ஹாலிடே துப்பாக்கி படத்தின் இந்தி ரீ மேக் ஆகும்.

கதாநாயகி யார் என்று இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில் படத்தில் பணியாற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய்யின் 62ஆவது படமான இதன் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது. படம் குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon