மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

வங்கிகளை இணைக்கச் சிறப்புக் குழு!

வங்கிகளை இணைக்கச் சிறப்புக் குழு!

பொதுத்துறை வங்கிகளை இணைக்கச் சிறப்புக் குழு ஒன்றை மத்திய அரசு அமைக்கிறது. இந்தக் குழுவிற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் டிவிட்டரில், "அரசாங்கம் வங்கித் துறையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவிருக்கிறது. பொதுத்துறை வங்கிக்கான சட்ட விதிகளிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படுகிறது. இதற்கான குழு ஒன்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் உருவாக்கப்படுகிறது" என்று தெரிவித்துள்ளார். அண்மையில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.2.11 லட்சம் கோடியைப் பொதுத் துறை வங்கிகளுக்கான மூலதன முதலீடாக மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. சில மாதங்களில் வங்கிச் சீர்திருத்தங்களுக்கான முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் அருண் ஜேட்லி கூறியிருந்தார்.

பொதுத் துறை வங்கிகள் அதிகமான கடன் சுமையால் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளன. இதிலிருந்து பொதுத் துறை வங்கிகளை மீட்க மாற்றுச் சட்ட விதிகளை வகுக்க வேண்டும் என்று ஆகஸ்ட் மாதம் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அருண் ஜேட்லி தலைமையில் புதிதாகக் குழு ஒன்று அமைக்கத் தற்போது முடிவுசெய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon