மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 12 டிச 2019

ரயில் சேவையில் பாதிப்பில்லை!

ரயில் சேவையில் பாதிப்பில்லை!

சென்னையில் மழையின் காரணமாக மின்சார ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது.

சென்னையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் காரணமாக முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், அலுவலகத்துக்குச் செல்லும் வாகன ஓட்டிகள் சிறிய சாலைகள் இருக்கும் பகுதிக்குள் ஒரே சமயத்தில் நுழைகின்றனர். இதனால் அங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளும் ஊர்ந்து செல்வதைக் காண முடிகிறது. இதனால் அலுவலகத்துச் சென்று வருவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எளிதாக இருக்கும் என்பதால் பேருந்துகளைக் காட்டிலும் மின்சார ரயில்களில் பயணிக்க மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால் ரயில் சேவையிலும் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சம் நிலவியது. நேற்று மாலை மின்சார ரயில் சேவையும் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் மின்சார ரயில் சேவையில் எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தண்டவாளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால், ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்களில் தேங்கும் நீரை அகற்றுவதற்காக மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

சென்னையில் பெய்யும் மழை காரணமாக மின்சார ரயிலின் சேவை எந்த பாதிப்புமின்றி வழக்கம்போல் செயல்படும் என்று ரயில்வே துறை இன்று (அக்டோபர் 31 வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon