மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

பிளஸ்- 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ்- 2 துணைத் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பிளஸ் 2 துணைத் தேர்வு முடிவுகள் இன்று (அக்டோபர் 31) வெளியிடப்படுகிறது

அரசு தேர்வுத் துறை இயக்குநர், தண்.வசுந்தரா தேவி நேற்று (அக்டோபர் 30) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை துணைத் தேர்வு நடத்தப்பட்டது. அதற்கான முடிவுகள் இன்று பிற்பகல் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியாகிறது. தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியவர்களும், தத்கல் திட்டத்தின் கீழ் தேர்வு எழுதியவர்களும் தங்கள் பதிவெண், பிறந்த தேதி ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்து தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்கள் நவம்பர் 2ஆம் தேதி முதல் நவம்பர் 4ஆம் தேதி வரை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்திப் பதிவு செய்துகொள்ள வேண்டும். விடைத்தாள் நகல் பெற மொழிப்பாடங்களுக்கு 550 ரூபாயும்,மற்ற பாடங்கள் ஒவ்வொன்றுக்கும் தலா 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். மறுகூட்டலுக்கு மொழிப்பாடங்கள் மற்றும் உயிரியலுக்குத் தலா 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு தலா 205ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கான முடிவுகள் அக்டோபர் 26ஆம் தேதி வெளியிடப்பட்டன. அவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்றும் நாளையும் (நவம்பர் 1) மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon