மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

பிராட்பேண்ட் - டி.வி. சேவையில் ஜியோ!

பிராட்பேண்ட் - டி.வி. சேவையில் ஜியோ!

2018ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பிராட்பேண்ட் - டி.வி சேவைகளில் களமிறங்கத் தயாராகியுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் சேவையைத் தொடங்கி, ஒட்டுமொத்த தொலைத் தொடர்புச் சந்தையையே ஆட்டம்காண வைத்தார். இந்நிலையில், பிராட்பேண்ட் இண்டர்நெட் மற்றும் ‘ஃபைபர் டூ ஹோம்’ டி.வி. சேவைகளை வழங்கவும் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக இந்தியாவின் முன்னணி 30 நகரங்களிலும் பின்னர் நாடு முழுவதும் சேவையை விரிவாக்கம் செய்யவும் ஜியோ திட்டமிட்டுள்ளது. இந்நகரங்களில் உள்ள சுமார் 10 கோடி குடும்பங்களில் டி.வி. சேவை வழங்கவிருப்பதாக ஜியோ அறிவித்துள்ளது.

முன்னதாக ஜியோ நிறுவனம் டெல்லி என்.சி.ஆர்., மும்பை, சூரத், அகமதாபாத், வதோதரா உள்ளிட்ட நகரங்களில் சோதனை அடிப்படையில் ஃபைபர் இணைப்புகளை அமைத்தது. இந்த இணைப்பு வாயிலாக 1 ஜி.பி.பி.எஸ். வேகமுள்ள டேட்டாவைப் பெற இயலும். இந்த இணைப்புகளை டிசம்பர் மாதத்தில் அமைத்து முடிக்க ஜியோ முடிவு செய்துள்ளது. தொலைத் தொடர்புச் சேவைகளை விடுத்துப் பிற சேவைகள் வாயிலாக மாதத்துக்கு ரூ.1,500 கோடி வரையில் வருவாய் ஈட்டும் முனைப்பில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இச்சேவைகளைக் கையிலெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon