மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

தேசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற மனோஜ்

தேசிய குத்துச்சண்டை: தங்கம் வென்ற மனோஜ்

தேசிய குத்துச்சண்டைப் போட்டியில் இரண்டாவது முறையாக மனோஜ் குமார் தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியனான சிவா வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.

தேசிய குத்துச்சண்டைப் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று (அக்டோபர் 30) நடைபெற்ற ஆடவருக்கான 69 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் மனோஜ் குமார், சர்வீசஸ் வீரர் துரியோதன் சிங்கை எதிர்கொண்டார். பரபரப்பான இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய மனோஜ் குமார், 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் துரியோதன் சிங்கை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார்.

60 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற மற்றொரு இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான சிவா தாபா மற்றும் சர்வீசஸ் வீரர் மணீஷ் கௌஷிக் மோதினர். தொடக்கத்தில் சிறப்பாக ஆடிய சிவா தனது அதிரடியான `பஞ்ச்' மூலம் கௌஷிக்கைக் கலங்கடித்தார். இரண்டாம் சுற்றில் எதிர்பாராத விதமாக கௌஷிக்கின் `பஞ்ச்', சிவாவின் கண்களுக்கு மேல் காயப்படுத்தியதால் ரெப்ரீ ஆட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார். அதன் பின்னர் முழுமையாக குணமடையாத சிவா, தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் விட்டுக்கொடுக்கும் நோக்கில் விளையாடாமல், கடைசிவரை போராடி வீழ்ந்தார். இதனால் சிவாவிற்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சிவா, 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்காக களமிறங்கினார். இதன் மூலம் இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் களமிறங்கிய இளம் குத்துச்சண்டை வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார். மேலும் இவர் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற மூன்றாவது இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon