மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

ஜி.எஸ்.டி.: காபி உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

ஜி.எஸ்.டி.: காபி உற்பத்தியாளர்கள் கோரிக்கை!

இன்ஸ்டண்ட் காபி, காபி நீராற்றும் பணி ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று காபி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்ஸ்டண்ட் காபி உள்ளிட்ட பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டால் காபி நுகர்வில் பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சர்வதேசச் சந்தையில் காபிப் பொருட்களின் விலை நிலையாக இல்லாமல் உள்ளது. இதனால் உள்நாட்டுச் சந்தையிலும் காபி விலையில் தாக்கம் ஏற்படுகிறது. கடும் அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கும் காபி உற்பத்தியாளர்கள், காபியின் விலை குறித்து கவனமாகவே உள்ளனர். இன்ஸ்டண்ட் காபிக்கு 28 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. காபி விதைகளை நீராற்றும் பணிக்கு 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது.

காபி உற்பத்தித் துறையின் பங்குதாரர்களைப் பிரதிநிதியாகக் கொண்ட இந்தியக் காபி டிரஸ்ட் இப்பிரச்னை குறித்து பிரதமர் அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்ஸ்டண்ட் டீக்கு விதிக்கப்படும் 18 சதவிகித ஜி.எஸ்.டி. வரியைப் போலவே இன்ஸ்டண்ட் காபிக்கும் 18 சதவிகிதம் வரி விதிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலகத்துக்கு இந்திய காபி டிரஸ்ட் கோரிக்கை விடுத்துள்ளது. பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், “இன்ஸ்டண்ட் காபி மீதான ஜி.எஸ்.டி. வரியைக் குறைப்பதால் தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த காபி விவசாயிகள் பயனடைவார்கள்” என்று இந்திய காபி டிரஸ்ட்டின் தலைவர் அனில் குமார் பந்தாரி குறிப்பிட்டுள்ளார்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon