மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 15 டிச 2019

அதிகரிக்கும் சீரக சாகுபடி!

அதிகரிக்கும் சீரக சாகுபடி!

அதிகமான விலை மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகிய காரணங்களால் இந்த ஆண்டு சீரகம் சாகுபடி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குஜராத் மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் சீரக சாகுபடி இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீரகத்திற்கு கிடைத்த நல்ல விலையால் இந்த ஆண்டும் அந்தப் பகுதிகளில் சாகுபடி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இந்தியாவின் மொத்த சீரக உற்பத்தியில் மேற்கூறிய இரு மாநிலங்களும் 85 சதவிகிதம் வரை உற்பத்தி செய்கின்றன. ஆகஸ்ட் மாத நிலவரப்படி சீரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.19,620 வரை விலை போனது.

உள்நாட்டுத் தேவை மற்றும் ஏற்றுமதிக்கான தேவையும் தொடர்ந்து அதிகமாக உள்ளதால் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநில விவசாயிகள் சீரக உற்பத்திக்கு இந்தப் பருவத்திலும் அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2016-17 நிதியாண்டில் இந்தியாவில் 4.85 லட்சம் டன் அளவிலான சீரகம் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. இது சுமார் 7.60 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்தது. இந்தப் பருவத்திற்கான சாகுபடி நவம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon