மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 7 ஜூலை 2020

பாஜகவை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான்!

பாஜகவை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான்!

‘பாஜகவைத் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியதே அதிமுகதான்’ என்று ஒருங்கிணைந்த அதிமுக அணிகளின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இரட்டை இலை தொடர்பான இறுதி விசாரணை நேற்று (அக்டோபர் 30) டெல்லி தேர்தல் ஆணையத்தில் நடைபெற்றது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் ஆணையம் நாளைய தினத்துக்கு விசாரணையை ஒத்திவைத்தது.

இந்த நிலையில் விசாரணைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “எங்கள் தரப்பிலிருந்து முழுமையான பிரமாணப் பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், தினகரன் தரப்போ போலியான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. எங்கள் தரப்பிலிருந்து பொதுக்குழு நடைபெற்ற வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். எனவே, எங்களுக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்” என்றவரிடம், “போலி ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளீர்கள் என்ற குற்றச்சாட்டை தினகரன் தரப்பினர் முன்வைத்துள்ளனரே” என்ற கேள்விக்கு, “எங்கள் தரப்பிலிருந்து 1,877 பொதுக்குழு உறுப்பினர்கள் பிரமாணப் பத்திரம் கொடுத்துள்ளனர். அதில் ஐந்து பேரை மட்டும் அவர்களால் சரிகட்ட முடிந்துள்ளது, மற்றவர்களை சரிகட்ட முடியவில்லை” என்றார்.

மேலும் அவர், “அதிமுகவை உருவாக்கியவர் எம்.ஜி.ஆர். அதை வளர்த்தவர் ஜெயலலிதா. எனவே நாங்கள் யாரிடத்திலும் நிற்க வேண்டிய அவசியமில்லை. காரணம், தமிழகத்தில் பாஜகவை அறிமுகப்படுத்தியதே அதிமுகதான். 1998ஆம் ஆண்டு தேர்தலில் நாங்கள்தான் பாஜகவை தமிழகத்தில் அறிமுகப்படுத்தினோம். பாஜக டெல்லியில் ஆட்சி நடத்தலாம். ஆனால், ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon