மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

வடிவேலு இல்லாத இம்சை அரசன் 24-ம் புலிகேசி?

வடிவேலு இல்லாத இம்சை அரசன் 24-ம் புலிகேசி?

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படக்குழுவினரோடு வடிவேலுவுக்குக் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இம்சை அரசன் 24-ம் புலிகேசி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இதற்காக சென்னை, பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாள்களிலேயே, படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. வடிவேலுவுக்கும் படக்குழுவினருக்கும் சம்பள விஷயத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடே படப்பிடிப்பு நிறுத்தத்துக்கான காரணமாக கோலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதுவரை இரண்டு முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. படத்துக்கான அரங்குகள் மற்றும் அனைத்து நடிகர்களுக்கும் சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதால் படம் கைவிடப்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே வேறு நடிகரை இந்த கதையில் நடிக்கவைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபடவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

முன்பாக, வடிவேலுவுடன் சம்பளப் பேச்சுவார்த்தை நீண்ட நாள்கள் நடைபெற்றதால், படப்பிடிப்பு தாமதமாகத் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon