மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 27 பிப் 2020

வாட்ஸ்அப் வடிவேலு

வாட்ஸ்அப் வடிவேலு

*முருகேசு தன்னுடைய காரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மனதுக்குள் ஏதோ குறுகுறுப்பு. எதையோ ஒன்றை தவறவிட்டதைப்போல உணர்வு. காரை ஓரமாக நிறுத்தி, தான் ஷாப்பிங் செய்த பொருள்களைச் சரிபார்த்தார்.

மனைவிக்கு வாங்கிய புடவை, மகளுக்கு வாங்கிய பொம்மை, தனக்கு வாங்கிய அலைபேசி மற்றும் பணப்பை, கடன் அட்டை, இத்யாதி எல்லாம் சரியாகவே இருந்தன.

மீண்டும் காரைக் கிளப்பினார். மறுபடியும் அதே தவற விட்ட உணர்வு. ஓட்டுநர் உரிமம்? காரை நிறுத்தி சரிபார்க்க அதுவும், மற்ற ஆவணங்களும் இருக்கவே, திருப்தியுடன் இல்லம் வந்தடைந்தார்.

முருகேசுவைக் கண்ட மகள் ஆவலோடு ஓடிவந்தாள்..

“ஹையா... டாடி வந்தாச்சு! டாடி... அம்மா எங்கே? காரில் காணோமே...”

செத்தாண்டா சேகர்

ச்ச்சே... எங்க சில பேருக்குத்தான் இதுபோல வாய்ப்புகள் அமையுது... ம்ஹூம்ம்.

உள்ளுணர்வு சொல்வதை பல நேரம் கேட்க வேண்டும். ஆனால், சில நேரம் கவனிக்காமல் விடுவதே சாலச் சிறந்தது .

- கொளுத்திப் போடுவோம்

திங்கள், 30 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon