மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 11 ஆக 2020

பாட்டுக்கு சிவகார்த்தி - ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி

பாட்டுக்கு சிவகார்த்தி - ட்ரெய்லருக்கு விஜய் சேதுபதி

இயக்குநர் கௌரவ் நாராயணனின் ‘இப்படை வெல்லும்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரிலீஸ் செய்திருக்கிறார்.

கௌரவ்வின் தூங்கா நகரம் மிகப்பெரிய ஹிட். சிகரம் தொடு திரைப்படமும் வெற்றியையே பதிவு செய்திருக்கிறது. இதற்குக் காரணம், படத்தைப் பார்க்கவரும் சாமான்யனுக்கு மிக அருகில் தனது திரைப்பட கதாபாத்திரங்களை நிறுத்தும் இயக்குநரின் திறமைதான் காரணம்.

தற்போது வெளியாகியிருக்கும் இப்படை வெல்லும் திரைப்படத்தின் கேரக்டரையும் அப்படியே உருவாக்கியிருக்கிறார். தனது திருமணத்தை நடத்தவே மிகவும் கஷ்டப்படும் ஒரு கேரக்டர், மாநிலத்தில் நடைபெறும் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புபடுத்தப்பட்டு வில்லன்களாலும், போலீஸ் டீமினாலும் துரத்தப்படுவது படத்தின் மைய ஓட்டம். இதைச்சுற்றியே போலீஸ் - வில்லன் - ஹீரோ ஆகியோரின் அறிவுப்போட்டி நடைபெறுகிறது.

ட்ரெய்லரில் எப்படிக் காட்டினாலும், போலீஸைத் தவறாக சித்திரிப்பது கௌரவ்வின் வழக்கமல்ல. எனவே, திரைப்படமாகப் பார்க்கும்போது அங்கு நடைபெறும் மாற்றங்களே, கதையின் வேகத்துக்கு வேகமளிக்கும். ரோகிணி கேரக்டரையும் சஸ்பென்ஸாக வைத்திருப்பதால், நிறையவே எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது இப்படை வெல்லும்.

இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு சிவகார்த்தியைக் கூப்பிட்டு அமர்க்களப்படுத்தியது போலவே, விஜய் சேதுபதியை இந்தப் படத்தின் ட்ரெய்லரின் பின்னணியில் பேச வைத்திருக்கிறார்கள். விஜய் சேதுபதி ட்ரெய்லருக்கு மட்டும் குரல் கொடுத்திருக்கிறாரா அல்லது படத்திலும் ஒரு கேரக்டருக்கு உருவம் கொடுத்திருக்கிறாரா என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.

கௌரவ் திரைப்படத்தின் பலமும், பலவீனமும் படத்தில் இருக்கும் அனைவருமே அறிவாளிகளாகவும், எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் மன தைரியம் கொண்டவர்களுமாகவே இருப்பார்கள். இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கில்லாமல் உருவாகியிருப்பது ட்ரெய்லரிலேயே தெரிகிறது. நீங்களே பாருங்கள்.

இப்படை வெல்லும் ட்ரெய்லர்

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon