மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

குறைந்த விலை ஸ்மார்ட்போன்: ஏர்டெல்!

குறைந்த விலை ஸ்மார்ட்போன்: ஏர்டெல்!

ரூ.1,349 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக ஏர்டெல் நிறுவனம், செல்கான் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

சமீபத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இலவசமாக மொபைல் போன்களை நாட்டு மக்களுக்கு வழங்குவதாக அறிவித்திருந்தது. அதாவது, ரூ.1,500 செலுத்தி இந்த மொபைல் போன்களை வாங்கினால் மூன்று வருடங்களுக்குள் முழுப் பணமும் வாடிக்கையாளர்களுக்குத் திருப்பிச் செலுத்தப்படும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த மொபைல் போன்களைப் பெறுவதற்காக ரூ.500 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்தவர்களும் உண்டு. இந்த நிலையில் ஜியோவின் இந்த முயற்சிக்குப் போட்டியாக ஏர்டெல் நிறுவனமும் ‘மேரா பெஹ்லா ஸ்மார்ட்போன்’ என்ற பெயரில் குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வழங்க முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே ஏர்டெல் நிறுவனம் ரூ.1,399 விலையில் ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக கார்பன் மொபைல் தயாரிப்பு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. இந்த நிலையில் தற்போது செல்கான் நிறுவனத்துடன் மற்றொரு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி, ரூ.1,349 விலையுடைய ஸ்மார்ட்போனானது இரட்டை சிம், எஃப்.எம். ரேடியோ மற்றும் 4 அங்குல தொடுதிரை வசதியைக் கொண்டிருக்கும் என்றும், கூகுள் பிளே ஸ்டோரின் அனைத்து அப்ளிகேஷன்களும் இயங்கும் வகையில் இருக்கும் என்றும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon