நடிகை ஸ்ருதிஹாசன் உடல் பருமனான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
சமீபத்தில் ஸ்ருதிஹாசன் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை அவருடைய ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். இவை அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், முன்பைவிட மிகவும் உடல் பருமனாக காட்சியளிப்பதாகச் சிலர் விமர்சன கருத்துகளை முன்வைத்தும் வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்துவந்த ஸ்ருதி தற்போது பெரிதாகப் படவாய்ப்பு ஏதும் இல்லாமல் இருக்கிறார். சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் ‘சங்கமித்திரா’ படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின்னர் ஏதோ சில காரணங்களுக்காக அப்படத்தில் இருந்து விலகிவிட்டார். தற்போது, அவர் கையிருப்பில் ‘சபாஷ் நாயுடு’ படம் மட்டுமே உள்ளது. அதன் பணிகளும் முடங்கிக் கிடக்கிறது.
இந்த நிலையில், சமீபத்தில் கடை திறப்பு விழாவில் பங்கேற்ற ஸ்ருதிஹாசனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது. இதைப் பார்த்த சிலர், ஸ்ருதி முன்பைவிடவும் உடல் பருமனாக இருப்பதாக விமர்சன கருத்துகளை முன்வைத்துள்ளதோடு அந்தப் புகைப்படம் வைரலாக பரவிவருவது குறிப்பிடத்தக்கது.