மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

மூளைக்கு உதவும் முள்ளங்கி: ஹெல்த் ஹேமா

மூளைக்கு உதவும் முள்ளங்கி: ஹெல்த் ஹேமா

முள்ளங்கி என்றாலே முகம் சுளிக்கும் வகையிலும் “இன்னிக்கும் முள்ளங்கிதானா?” என்ற சலிப்புடனே சாப்பிடத்தொடங்குவது இயல்புதான். அதிலும் பல பல வெரைட்டிகள்... முள்ளங்கி உப்புமா, முள்ளங்கி புலாவ் என்று கிச்சன் கீர்த்தனா செய்யப்போவதாக கூறினார். ஆனால், அதன் பயன்களை எடுத்துக்கூறினால் இனி வாரம் ஒருமுறையாவது சாப்பாட்டிலோ அல்லது மாலை நேர சிற்றுண்டிகளிலோ சேர்த்துக்கொள்வீர்கள் என்பது உறுதி.

முள்ளங்கியின் பலன்கள்

சிவப்பு முள்ளங்கி:

சிவப்பு முள்ளங்கி சிறுநீர் பையைச் சுத்தமாக்கிச் சிறுநீரை முறைப்படுத்தும். நீர்க்குத்தலைப் போக்கும். வயிற்று பூச்சிகளை அழிக்கும். ஜீரணத்தை எளிதாக்கும். மூலநோய், வெள்ளை நோய், பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளைக் குறைக்கும். கண்ணெரிச்சலை நீக்கும் குணம் உடையது. எலும்புகளுக்கும் மூளைக்கும் பலம் தரும். வயிற்று புண்களைக் குணப்படுத்தக் கூடியது. உடல் சோர்வு, உடல் சூடு மற்றும் தோல் வறட்சி முதலியவற்றை போக்கக்கூடியது. தோலை வழவழப்பாக்கும் தன்மையுடையது. சிறு குழந்தைகளுக்கும், மழை காலங்களில் பெரியவர்களுக்கும் ஆகாது.

வெள்ளை முள்ளங்கி:

வெள்ளை முள்ளங்கி சிறுநீரை ஒழுங்குப்படுத்தும். மூலநோய், தோல் வறட்சி, வயிற்றுப்போக்கு மற்றும் நீர் சுருக்கு போன்ற நோய்களைக் குணப்படுத்தும். சீதபேதியைக் கட்டுப்படுத்தும். எலும்புக்குப் பலம் சேர்க்கும். மஞ்சள் காமாலைக்கு மிகவும் நல்லது. வாத நோய்க்காரர்கள் குறைவாக உண்ணலாம். மழைக்காலங்களில் வயதானவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் ஆகாது. பெண்கள் மாதவிடாய் காலங்களில் தவிர்ப்பது நல்லது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon