மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

சர்க்கரை விலை உயர்வு: தேமுதிக ஆர்ப்பாட்டம்!

சர்க்கரை விலை உயர்வு: தேமுதிக ஆர்ப்பாட்டம்!

‘ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக சார்பில் வரும் நவம்பர் 3ஆம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடைபெறும்’ என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் சர்க்கரையின் விலை உயர்த்தப்பட்டு, கிலோ ஒன்று 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதற்கு பல்வேறு தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனே விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ள நேரத்தில், வரும் நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து ரேஷன் கடைகள் முன்பும் திமுக சார்பில் போராட்டம் நடைபெறும் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்று பல்வேறு கட்சிக்கும் போராட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில் ரேஷனில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று (அக்டோபர் 30) தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு திடீரென்று ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை 13.50 ரூபாயிலிருந்து, 25 ரூபாயாக உயர்த்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயர்வைக் கண்டித்து தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் தலைமையில் வரும் 03.11.2017 (வெள்ளிக்கிழமை) காலை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த் கலந்துகொண்டு கண்டன உரையாற்றுகிறார். இதில் மாவட்டம், பகுதி, வட்டம், கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon