மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, செவ்வாய், 4 ஆக 2020

அரிய வகை தும்பி கண்டுபிடிப்பு!

அரிய வகை தும்பி கண்டுபிடிப்பு!

இந்தியாவிலேயே முதன்முறையாக 83 ஆண்டுகளுக்குப் பின், “இண்டியன் எமரால்ட்” எனப்படும் அரிய வகை தும்பியினம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளா தேக்கடி பெரியார் புலிகள் காப்பகத்தில் திருவனந்தபுரம் இண்டியன் டிராகன் ஃப்ளை சொசைட்டி சார்பில் கடந்த மூன்று நாள்களாகத் தும்பிகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 50 குழுக்கள் தேக்கடியில் முகாமிட்டிருந்தனர். அவர்கள், நீரோட்டமுள்ள உயரமான பகுதிகளுக்குச் சென்று கணக்கெடுப்பு நடத்தினர். குழுக்கள் எடுத்த புகைப்படங்கள் மூலம் 77 வகையான தும்பி இனங்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், 83 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக “இண்டியன் எமரால்ட்” என்னும் அரிய வகை தும்பி கண்டுபிடிக்கப்பட்டது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon