மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

செல்ஃபிக்குச் சவால்விடும் போத்தி!

செல்ஃபிக்குச் சவால்விடும் போத்தி!

ஸ்மார்ட்போன்களில் முக்கிய அம்சமான தன்னைத்தானே படமெடுக்கும் செல்ஃபி தொழில்நுட்பத்துக்குப் போட்டியாகத் தற்போது போத்தி (Bothie) என்னும் தொழில்நுட்பம் நோக்கியா-8 ஸ்மார்ட்போனில் அறிமுகமாகியுள்ளது.

2003ஆம் ஆண்டு சோனி நிறுவனம், வெளியிட்ட 'Sony Ericsson Z1010' என்ற மொபைல் போன் மூலம்தான் Front-Facing camera எனப்படும் செல்ஃபி தொழில்நுட்பம் முதன்முதலில் ஸ்மார்ட்போன்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு செல்ஃபி பல மாற்றங்களைச் சந்தித்து இன்று 'குரூப்பி' எனப்படும் 360 டிகிரி பனோரமா வரை வளர்ந்துள்ளது.

இந்தநிலையில் நோக்கியா நிறுவனம் தற்போது `நோக்கியா-8' என்ற ஸ்மார்ட்போனில் போத்தி என்ற புதிய தொழில்நுட்பத்தை முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது.

போத்தி (Bothie) என்றால் என்ன?

ஸ்மார்ட்போனில் ஒரே சமயத்தில் Front-Facing cameraவிலும், Rear-Facing cameraவிலும் புகைப்படம் எடுக்கும் தொழில்நுட்பமே 'போத்தி' எனப்படும். இந்த முறையில் எடுக்கப்படும் புகைப்படம் மற்றும் வீடியோ, ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் (Split Screen) வடிவில் கிடைக்கும்.

போத்தியின் பயன்கள்:

இந்த Nokia 8ல் உள்ள Dual-Sight mode-ஐ பயன்படுத்தி ஒரே சமயத்தில் Split Screen மூலமாக Front and Rear கேமராவை இயக்கி ஃபேஸ்புக் மற்றும் யூடியூப்பில் Live Streaming செய்ய முடியும்.

கடந்த ஆண்டு சாம்சங் மற்றும் எல்.ஜி, நிறுவனங்கள் வெளியிட்ட போனில் இதே போன்று Front, Rear camera-வை ஒரேநேரத்தில் பயன்படுத்தும் வசதி இடம்பெற்றிருந்தது. ஆனால், இந்த Nokia 8 ஸ்மார்ட்போன் Live Streaming வசதியுடன் வெளிவரும் முதல் போனாகும்.

மேலும் இந்த போன் 4K வீடியோ ரெக்காடிங் தொழில்நுட்பத்துடன் வெளிவருவதால் இதில் ரெக்கார்ட் செய்யும் வீடியோ மற்றும் சவுண்ட் மிகத்தெளிவாக இருக்கும்.

இது 5.3 இன்ச் 2K display ஸ்க்ரீனுடன் வெளிவருவதால், புகைப்படம் மற்றும் வீடியோக்களை அதிக க்ளாரிட்டியுடன் பார்த்து ரசிக்க முடியும்.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon