மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 26 செப் 2020

அர்ஜுன் ரெட்டி தோற்றத்தில் துருவ்!

அர்ஜுன் ரெட்டி தோற்றத்தில் துருவ்!

அர்ஜுன் ரெட்டி தோற்றத்தில் சகோதரியின் திருமணத்தில் கலந்துகொண்டார் நடிகர் விக்ரமின் மகன் துருவ்.

திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவுக்கும் நேற்று (அக்டோபர் 30) காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் திருமணம் நடைபெற்றது.

இந்தத் திருமண நிகழ்வுக்கு வந்த துருவ், நீண்ட முடி தாடியுடன் கலந்துகொண்டார். சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்கவுள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ரேயா ஷர்மா நடிக்க, பாலா இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், அர்ஜுன் ரெட்டி படத்தில் வரும் நாயகன் விஜய் தேவரகொண்டா காதல் தோல்வியால் நீண்ட முடியுடன், தாடி வளர்த்துக்கொண்டு, போதைக்கு அடிமையான மருத்துவராக நடித்திருப்பார். அதேபோன்ற தோற்றத்தில் நேற்று திருமண நிகழ்ச்சிக்கு துருவ் வந்திருந்தார்.

அர்ஜுன் ரெட்டி படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு கருத்தியல் ரீதியாகவும் விமர்சனங்களைப் பெற்றது. எனவே இது தமிழில் ரீமேக் ஆவதால் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 31 அக் 2017

chevronLeft iconமுந்தையது