மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 2 ஜூலை 2020

பருத்தி விவசாயிகளுக்கு போனஸ் விலை!

பருத்தி விவசாயிகளுக்கு போனஸ் விலை!

குஜராத் மாநில பருத்தி விவசாயிகள் பயன்பெறும் வகையில் குவிண்டாலுக்கு ஆதார விலையுடன் சேர்த்து ரூ.500 போனஸாக வழங்குவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பருத்திக்குத் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,020 ஆதார விலையாக வழங்கப்படுகிறது. நடப்பு 2017 காரிஃப் பருவத்தில் 50.50 மில்லியன் குவிண்டால் அளவிலான பருத்தியை உற்பத்தி செய்ய குஜராத் மாநில அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. எனவே பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க குவிண்டால் ஒன்றுக்கு ஆதார விலையுடன் சேர்த்து ரூ.500 போனஸாக வழங்க அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அரசு கஜானாவில் ரூ.1,250 கோடி இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் பருத்தியின் சந்தை விலை ரூ.4,210 முதல் ரூ.4,700 வரையில் உள்ளது. பருத்தியின் மூன்று வகைகளின் ஆதார விலை முறையே ரூ.4,020, ரூ.4,270 மற்றும் ரூ.4,320 ஆக உள்ளது. போனஸ் விலையுடன் சேர்த்துப் பருத்தியின் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.4,820 ஆக உயர்ந்துள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள 56 கொள்முதல் நிலையங்களில் சுமார் 40 நிலையங்கள் நவம்பர் 1ஆம் தேதி முதல் மேற்கூறிய போனஸ் விலை கொள்முதல் திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தயாராகியுள்ளன. குஜராத் மாநிலத்தில் தற்போது பருத்தி விதைப்புப் பரப்பு 26.41 லட்சம் ஹெக்டேர்கள். இது வழக்கமான விதைப்புப் பரப்பைவிட 5 சதவிகிதம் குறைவாகும். எனவே பருத்தி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் போனஸ் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon