மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, ஞாயிறு, 5 ஜூலை 2020

ஆன்மீக குறைபாடா, ஆள்பவர்கள் குறைபாடா? :அப்டேட்குமாரு

ஆன்மீக குறைபாடா, ஆள்பவர்கள் குறைபாடா? :அப்டேட்குமாரு

எவ்வளோ வாங்குனாலும் அசரவே மாட்டார் போல எச்.ராஜா. இவர கலாய்ச்சே கடுப்பாயிட்டாங்க நெட்டிசன்ஸ். ஆனா இவரு மட்டும் தன்னை திட்டுறவங்களோட போஸ்ட்டுல போய் திட்டிட்டு வந்துடுறாரு. ஏன் இப்படி வாண்ட்டடா போய் வண்டியில ஏறுறாரு. தமிழ் சினிமாவுல முதல்ல வில்லனா நடிச்சு படிப்படியா ஹீரோவாகுற மாதிரி அரசியல்லயும் ட்ரை பண்ணுறாரு போல. சரி அதுக்கும் ஒரு அளவு வேண்டாமா? கந்து வட்டி கொடுமையில மூணு உசுரு கருகிப்போயிருக்கு. ஒருத்தர் உசுருக்கு போராடிக்கிட்டு இருக்காரு. இதுக்கெல்லாம் பகுத்தறிவு பேசுனது தான் காரணம், ஆன்மீக குறைபாடு ஏற்பட்டுருக்குன்னு மனசே இல்லாமல் இப்படி பேட்டி கொடுக்குறதுக்கு தமிழ்நாட்டுல எந்த கட்சியிலயும் ஆளே இல்லை. எல்லாம் எச்.ராஜாட்ட கருத்து கேட்டு மைக்கை நீட்டுறாங்களே அவங்களை சொல்லனும்.

Hasan Kalifa

தாயின் புடவையே பிள்ளைகளின் காஸ்ட்லியான டிஸ்யூ.

JKK

நாட்டின் பொருளாதார அடிப்படை வலிமையாக உள்ளது: அருண் ஜெட்லி

அதையாவது மிச்சம் வையுங்க சாமி

கருப்பு கருணா

சரிப்பா... ஒன் வழிக்கே வர்றோம்... குடும்ப பெண்களை பாதிப்பது கந்து வட்டியா..? ஜி.எஸ்.டி யான்னு ஒரு நீயா நானா நடத்துங்களேன்...

ஆர் யூ ரெடி..!

சொல் வித்(து)வான்‏

ஈ.வெ.ரா ஆட்கள் தமிழகத்தை குட்டிசுவராக்கி விட்டார்கள்-H.ராஜா

எதையும் நம்பாமல் யோசித்து செயல்படும் நாங்கள் குட்டிசுவராகவே இருந்துட்டு போகிறோம்

கோழியின் கிறுக்கல்

ஒரு வேலை முடியனும்னா..

அஞ்சலகத்தில் அரை மணி நேரம்!

வங்கியில் அரை நாள்!

அரசு அலுவலகத்தில் ஒரு யுகமே ஆகும்!!!

முகிலன்

நாம் எதற்கும் தகுதியற்றவர் என்று சொல்ல ஒரு தோல்வி போதும், நாம் எதற்கும் தகுதியானவர் என்பதைச் சொல்ல ஒரு வெற்றி போதாது.!

மெத்த வீட்டான்

உயிரோடு இருப்பவர்களுக்க கட் அவுட் பேனர்கள் வைக்கக் கூடாது - ஹைகோர்ட் உத்தரவு #

உயிரோட செத்தது மாதிரிதான் இனி அரசியல்வாதிகளும் நடிகர்களும்

கோழியின் கிறுக்கல்

பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டு பொருட்களில் மிக முக்கியமான ஒன்று- அப்பா!!!

புகழ்

ஆளப்போறான் தமிழனெல்லாமிருக்கட்டும்..எப்போது நல்லா வாழப்போறான் தமிழன்..அதைச் சொல்லுங்கப்பா.

CreativeTwitz

சிவகாசி விரைவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் - முதல்வர்

போற ஊருக்கு எல்லாம் இப்படி ஒரு பிட்ட போட்ருறாரு , முதல்ல ஒசூர் , இப்ப சிவகாசியா

HAJAMYDEENNKS

உயிரோடு இருப்பவர்களுக்க கட் அவுட் பேனர்கள் வைக்கக் கூடாது - ஹைகோர்ட் உத்தரவு#

உண்மையிலே இதுதான் ஹார்ட் பிரேக்கிங் நியுஸ் அரசியல்வாதிகளுக்கு

Kozhiyaar

எந்த பெண்ணிற்காக மாப்பிள்ளை பார்த்தாலும், அவரைப் பற்றி விசாரிக்கும் பொறுப்பை தமிழக பாஜகவிடம் கொடுத்தால் அக்குவேர் ஆணிவேராக சொல்வார்கள்!!

கருப்பு கருணா

மூனு வேளையும் முக்கிமுக்கி சாமி கும்புடுற சாமியாரே முதலமைச்சரா இருக்குற மாநிலத்துல கொத்துகொத்தாய் குழந்தைங்க சாவுதே...மிஷ்டர் ஹெச்.ராஜா!

CreativeTwitz

சில விஷயங்களைப் பேசினால் பிரச்னை. சில விஷயங்களைப் பேசாம இருந்தா பிரச்னை. எதைப் பேசணும் எதைப் பேசக்கூடாதுன்றதை கண்டுபிடிப்பது பெரிய பிரச்னை!

கோழியின் கிறுக்கல்

இந்தியாவில் வேறு வழியில்லாமல் செய்யும் செயல்களில் முக்கியமான ஒன்று இன்ஜினியரிங் படிப்பது!!!

CreativeTwitz

நாத்தீகம் இருந்தால் தீக்குளிப்பு இருக்கும் - எச்.ராஜா

ராமர் மனைவி சீத்தா நாத்திகம் போல அதான் தீ குளிச்சு இருக்காங்க, இது தெரியாம போச்சே

vishnut

100 ரூவாக்கு 10% சதவீதம் வாங்குனா அதுக்கு பேரு #கந்துவட்டியாம்..

அதே 100 ரூவாக்கு 28% சதவீதம் வாங்குறதுக்கு பேரு #GST யாம்..

yugarajesh

எனக்கென்னவோ தமிழகத்தில் பாஜகவை வளரவிடாமல் தடுக்க அனுப்பட்ட 'ஸ்லீப்பர் செல்' தான் இந்த தமிழிசையும் எச்.ராஜாவுங்கிற டவுட் ரொம்ப நாளா இருக்கு

saravananucfc

அடுத்தவங்க கைவிட்ட பின்தான் வாழ்க்கையில் நம் தகுதியே தெரியும் என்பதை சைக்கிள் ஓட்ட கத்துக்கும்போது கைவிட்டவர்களே சொல்லி தந்துவிடுகிறார்கள்.

aselviku

குஜராத்தின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் முந்தைய மத்திய அரசு செயல்பட்டது; மோடி

எப்படி நீங்க இப்ப தமிழ்நாட்டுக்கு செயல்படுற மாதிரியா ஜி..?

சி.பி.செந்தில்குமார்

தமிழக அமைச்சர்கள் மோடி இருக்கும் வரை பயம் இல்லை என்கிறார்கள்: தமிழிசை

அவங்க சொல்றதை"எல்லாம் நம்பறீங்களா? மேடம், அம்மா இட்லி சாப்ட்டார்னாங்க

அஜ்மல் அரசை‏

நவம்பர்-8 கருப்பு தினமாக அனுசரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு-செய்தி

அன்னைக்கு சைக்கிள்ல ஏறுன சைத்தான் கீழே இறங்க ஒரு யுகம் கேட்கிறான்

எனக்கொரு டவுட்டு

கோபத்தில் சொல்லப்படும் வார்த்தைகளை முதன்மையாக எடுத்துக்கொள்ளும் நாம்தான், அன்பாக பேசிய வார்த்தைகளை மறந்தே போய்விடுகிறோம்..!

ajmalnks

வருமான வரி சோதனை அரசியல் ரீதியான மிரட்டல் என்றால் சந்திக்கவும் தயார்- விஷால்

ரஜினி,கமலுக்கு முன்னாடியே கழகத்தை உருவாக்கிடுவாரோ...

udanpirappe

மனிதர்கள் எவ்வளவு கொடூரமானவர்கள் என்பதை ,வட்டிக்கு வட்டி வாங்கும் முறையை உருவாக்கியதிலிருந்தே தெரிந்துகொள்ளலாம் .

சி.பி.செந்தில்குமார்

என்னை சிலர் ஜெ போல இருப்பதாக கூறுகின்றனர்: தமிழிசை # அவங்க சும்மா காமெடி பண்ணி இருக்காங்க,அதைப்போய் சீரியசா எடுத்து புளகாங்கிதப்பட்டா எப்டீ?

கருப்பு கருணா

சீதையை

தீயில் இறக்கியது

ஆன்மீகம்தான்..

ரூப்கன்வரை

எரித்ததும்

ஆன்மீகம்தான்...

மகாமகம் குளத்தில்

பலி வாங்கியதும்

ஆன்மீகம்தான்..

அடுத்தவனின் மசூதியை

இடித்துத்தள்ளியதும்

ஆன்மீகம்தான்..

சமணர்களை

கழுவிலேற்றியதும்

ஆன்மீகம்தான்..

ரஞ்சிதாக்களை

படுக்கையில் வீழத்தியதும்

ஆன்மீகம்தான்..

மனிதனை தீட்டுயென

தள்ளி வைத்ததும்

ஆன்மீகம்தான்..

அக்லாக் முகமதுவை

அடித்துக்கொன்றதும்

ஆன்மீகம்தான்...

நந்தனை

எரித்ததும்

ஆன்மீகம்தான்..

ஊரென்றும் சேரியென்றும்

பிரித்து வைத்ததும்

ஆன்மீகம்தான்..

சகல அயோக்கியத்தனத்தையும்

தாங்களே செய்துவிட்டு

நாத்தீகத்தை தூற்றுவதும்

அதே ஆன்மீகம்தான்..

-லாக் ஆஃப்

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon