மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

இயக்குநர் ஐ.வி.சசி மறைவு!

இயக்குநர் ஐ.வி.சசி மறைவு!

பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகை சீமாவின் கணவருமான ஐ.வி.சசி உடல் நலக்குறைவால் இன்று (அக்டோபர் 24) சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69.

கமல்ஹாசனை வைத்து குரு, அலாவுதீனும் அற்புத விளக்கும் ஆகிய படங்களையும் , ரஜினியை வைத்து காளி படத்தையும் இயக்கியுள்ளார். தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 100 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் வசித்து வந்த அவருக்கு இன்று காலை உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லும் போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.

தேசிய ஒருங்கிணைப்புக்காக இவரது ஆரூடம் படத்திற்கு 1982 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார். சிறந்த இயக்குநருக்கான மாநில விருது இரண்டுமுறை பெற்று உள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜே. சி. டேனியல் விருது மற்றும் 2013 ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதும் பெற்றிருக்கிறார்.

"நெடுங்கால நண்பரும் இணையிலா சினிமா தொழில் விற்பன்னருமான ஐ.வி.சசி காலமானார். என் சகோதரி சீமா சசிக்கும் குடும்பத்தாருக்கும் அன்பும் அனுதாபமும்" என்று கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon