மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 27 மே 2020

போலியோ : மணற் சிற்பம் மூலம் விழிப்புணர்வு!

போலியோ : மணற் சிற்பம் மூலம் விழிப்புணர்வு!

பல்வேறு நிகழ்வுகளுக்குத் தனது மணற் சிற்பம் மூலம் ஆதரவு தெரிவிக்கும் மணற் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் உலக போலியோ தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் இன்று (அக்டோபர் 24) மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளார்.

போலியோ வைரஸ்’ ஏற்படுத்துகின்ற தொற்றுநோய் தான் இளம்பிள்ளைவாதம். இந்த நோய் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அதிகமாகப் பாதிக்கிறது. குறிப்பாக, குழந்தைகளின் கை, கால் தசைகளைப் பாதித்து, அவற்றின் இயங்கும் சக்தியை இழக்கச் செய்கிறது. எனவே போலியோ நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குப்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. போலியோ நோய்க்குத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்த ஜோனஸ் சால்க் என்ற மருத்துவரின் நினைவாக உலக போலியோ தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 24ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அவரது கண்டுபிடிப்பினால் உலக அளவில் போலியோ 99% கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உலக போலியோ தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் மணல் சிற்பம் ஒன்றை சுதர்சன் வடிவமைத்துள்ளார். தாயுடன் ஒரு குழந்தை இருப்பது போல் மணலில் சிற்பம் வடிவமைத்துள்ளார். அந்த மணற் சிற்பத்தில் பைபை போலியோ என்ற வாசகத்தைக் எழுதியுள்ளார்.

செப்டம்பர் மாதம் ப்ளூ வேல் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் “ப்ளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி தற்கொலை செய்து கொள்ளும் குழந்தைகள் மீட்கப்பட வேண்டும். இளைஞர்கள் விழிப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்” என்னும் வாசகத்துடன் மணல் சிற்பத்தை வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செவ்வாய், 24 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon