மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 11 ஜூலை 2020

அமெரிக்கா: செல்வாக்குடைய 400 பேர்!

அமெரிக்கா: செல்வாக்குடைய 400 பேர்!

ஃபோர்ப்ஸ் இதழ் 400 செல்வாக்குமிக்க அமெரிக்கர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 2017ஆம் ஆண்டுக்கான 36ஆவது இதழில் அமெரிக்காவின் செல்வாக்குமிக்க 400 பேரின் பட்டியல் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்தப் பட்டியலில் முதலிடத்தை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பில்கேட்ஸ் இடம்பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இவர் கடந்த 24 ஆண்டுகளாக இடம்பிடித்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 89 பில்லியன் டாலர்களாகும். இவருக்கு அடுத்த இடத்தில் 81.5 பில்லியன் டாலர்களுடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார். மூன்றாவது இடத்தில் 78 பில்லியன் டாலர்களுடன் வாரன் பஃபெட் இருக்கிறார். நான்காவது இடத்தில் 71 பில்லியன் டாலர்களுடன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுகர்பெர்க் உள்ளார். லாரி எல்லிசன் 59 பில்லியன் டாலர்களுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார். இந்தப் பட்டியலில் இடம்பிடித்தவர்களில் மிகவும் வயது குறைந்தவர் ஸ்நாப்சேட் தலைவர் எவன் ஸ்பெய்கல் ஆவார். இவருடைய வயது 27. அதேபோல இந்தப் பட்டியலில் 22 பேர் புதிதாக இடம்பிடித்துள்ளனர். அதில் 14 பேர் சொந்தமாக தானே தொழில் தொடங்கி பில்லியனர் ஆனவர்களாவர். 14 பேர் மட்டுமே 40 வயதுக்குக் குறைவானவர்களாவர். பட்டியலில் இடம்பிடித்துள்ள 3 பில்லியனர்கள் கல்லூரி பட்டம் முடிக்காதவர்கள். இந்தப் பட்டியலில் 400ஆவது இடத்தைப் பிடித்துள்ளவர் லாஸ் ஏஞ்சல்ஸ் கூடைப்பந்து அணியின் உரிமையாளரான ஸ்டீவ் பால்மர் ஆவார். முதல் 25 இடத்தில் மூன்று பெண்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். அதில் வால்மார்ட் நிறுவனத்தின் அலைஸ் வால்டன், கேண்டி ஹெய்ரேஷின் ஜெக்லீன் மார்ஸ் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் லார்னே போவெல் ஆகியோர் முறையே 13, 16 மற்றும் 24 ஆகிய இடங்களில் உள்ளனர்.

ஃபோர்ப்ஸ் கடந்த 1982ஆம் ஆண்டு முதல் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களின் குறைந்தபட்ச மதிப்பு 2 பில்லியன் டாலர்களாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் மதிப்பு 1.7 பில்லியனாக இருந்தது. அதேபோல தோராய சொத்து மதிப்பும் இந்த ஆண்டு 6.7 பில்லியனாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதன் மதிப்பு 6 பில்லியனாக இருந்தது. இந்த ஆண்டு பட்டியலில் இடம்பிடித்துள்ள 400 பேரின் மொத்த சொத்து மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலர்களாகும். கடந்த ஆண்டில் இந்த மதிப்பு 2.4 லட்சம் கோடி டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon