மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 21 ஜன 2021

மனித நேயரின் நிலவேம்பு பிரகடனம்!

 மனித நேயரின் நிலவேம்பு பிரகடனம்!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

டெங்கு காய்ச்சலுக்காக இன்று தமிழ்நாடெங்கும் நிலவேம்பு கஷாயம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அரசாங்கமும் பல்வேறு சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை இலவசமாகக் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நிலவேம்பு கஷாயத்தை தமிழக மக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி குடிப்பதை தடுக்கும் வண்ணம் சில சமூக விரோதிகள் நிலவேம்பு குறித்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பி உள்ளன. இதனை குடிப்பதால் மலட்டுத் தன்மை ஏற்படும் எனும் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆனால் நிலவேம்பால் எந்த பாதிப்பும் ஏற்படாது என சித்த மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

சித்த மருத்துவர்கள் கூறும் முன்பே... இன்று நாங்கள்தான் முதலில் நிலவேம்பு கஷாயத்தை விநியோகித்தோம் என்று சில தன்னார்வ அமைப்புகள் போலியாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் நிலையில்... 2011 ஆம் ஆண்டு மேயராக பொறுப்பேற்ற மனித நேயர், தனது பதவிக் காலத்தில் டெங்கு தாக்குதலில் இருந்து சென்னையைக் காப்பாற்ற நிலவேம்பு கஷாயத்தையும், பப்பாளி இலை சாற்றையும் காய்சச்லுக்கு மருந்தாக பயன்படுத்தலாம் என்று முதல் முறையாக அறிவித்தார்.

அப்போது மனித நேய மேயர் மேற்கொண்ட தீவிர ஆலோசனையின் பேரில் அப்போதைய சுகாதாரத்துறை செயலாளருடன் கலந்து பேசி தமிழக முதல்வரான ஜெயலலிதாவிடம் நிலவேம்பு பற்றி எடுத்துரைத்தைருக்கிறார். இதன் விளைவாக 2012 ஆண்டு ஆண்டு தமிழக அரசு ஓர் அரசாணை வெளியிட்டது.

இந்த அரசாணையில், நிலவேம்பு, பப்பாளி இலை சாறு மற்றும் மலைவேம்பு ஆகியவை டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலுக்கு மிகவும் உகந்தது. இவை ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் தாக்கத்தை குறைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், சர்வதேச மருந்து அறிவியல் மற்றும் ஆய்வு இதழில் நிலவேம்பு குறித்த ஆய்வு கட்டுரை ஒன்றும் வெளியாகி உள்ளது. அதில் நிலவேம்பு டெங்கு காய்ச்சலுக்கு உகந்தது என ஆய்வில் தெரிய வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவேம்பை 139 நோயாளிகளுக்கு அளித்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அது பாதுகாப்பானது என்றும், நோய் தாக்கத்தை குறைப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்திய அரசின் 1940 மருந்து சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவ புத்தகத்திலும் நிலவேம்பு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிலவேம்பு குறித்த சர்ச்சைகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. நிலவேம்பு கசாயம் என்பது தனிப்பட்ட ஒன்றல்ல, நிலவேம்புடன் 8 விதமான இயற்கை மூலப்பொருட்கள் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது. 1 வயதுக்கு உட்பட குழந்தைகள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் இந்த நிலவேம்பை பரிந்துரைக்கப்பட்ட அளவின் படி கொடுக்கலாம்.

நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலை சாறை எல்லாரும் பயன்படுத்தலாம் என்று அரசாணை வெளியிட்டு, அதுபற்றி நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டு முதன் முதலில் நிலவேம்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் சென்னை மாநகர மேயர் மனித நேயர் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசியல்வாதி என்றால் அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு அதன் படி செயல்படக் கூடியவர்கள் என்ற பொதுவான ஒரு பிம்பம் இருக்கிறது. ஆனால் அதிகாரிகளுக்கும் புதிய புதிய ஆலோசனைகளை சொல்லி, உறுதியான முடிவெடுப்பதற்கு உறுதுணையாக இருந்திருக்கிறார் நமது மனித நேய மேயர்,

இந்த வகையில் தமிழ்நாட்டின் வரலாற்றில் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாக நிலவேம்பு அமையும் என்று முதன் முதலில் பிரகடனப்படுத்தியவர் என்ற பெருமை மனித நேயருக்கு உண்டு. எனவே இப்போது நில வேம்புக்கு எதிராக ஆயுதம் தூக்குபவர்களை, மனித நேயர் வெளியிட வைத்த அரசாணை என்ற கேடயம் கொண்டு எதிர்கொள்வோம்.

கருத்துகளை தெரிவிக்க... [email protected]

வளரட்டும் மனித நேயம்

விளம்பர பகுதி

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon