மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 15 ஜூலை 2020

குளிர வைத்த கொங்கில் பிராட்டி!

 குளிர வைத்த கொங்கில் பிராட்டி!

விளம்பரம்

கொங்கில் பிராட்டியை சோதிக்க நினைத்த ராமானுஜர்... தனது சிஷ்யர் மூலமாக, ‘இங்கே இருக்கும் வைணவர்களில் ராமானுஜர் இருக்கிறாரா என்று உம்மால் கண்டுபிடிக்க முடியுமா?” என்று கேட்டார்.

அதற்கு கொங்கில் பிராட்டி, ‘எனக்கு ராமானுஜரின் முகத்தை விட அவரது திருவடிகள்தான் அதிக பரிச்சயம். திருவரங்கத்தில் இருந்தபோது ராமானுஜரின் திரு முகத்தை விட திருவடிகளையே தினம்தோறும் சேவித்து வந்திருக்கிறேன். அதனால் இங்கே இருப்பவர்களின் திருவடிகளைப் பார்த்தாலே அவற்றில் என் ராமானுஜ ஆச்சாரியரின் திருவடிகளை சரியாக நான் கண்டுபிடிப்பேன்’’ என்று பணிவோடு தெரிவித்தார்.

உடனே அந்த சிஷ்யர் வெள்ளை உடையில் இருக்கும் ராமானுஜரைப் பார்க்க, ராமானுஜரும் தன் கண்ணசைவாலேயே சரி என்று சைகை காட்டினார்.

ராமானுஜரும் அவரோடு வந்த வைணவர்களும் வரிசையாக அமர்ந்தனர்.கொங்கில் பிராட்டியிடம், ‘தாயே... தாங்கள் ஒவ்வொருவரது திருவடியாய் பார்த்து வாருங்கள். எது ராமானுஜருடைய திருவடி என்று கூறுங்கள்’ என்று சிஷ்யர்கள் சொல்ல...

‘அப்படியே ஆகட்டும் சுவாமி, இதோ தேடுகிறேன்’ என்று சொல்லி அங்கிருக்கும் வைணவர்களின் திருவடிகளை எல்லாம் தரிசிக்க ஆரம்பித்தாள் கொங்கில் பிராட்டி.

தான் திருவரங்கத்தில் இருந்த காலங்களை எல்லாம் தன் கண்களுக்குள் கொண்டு வந்தாள் பிராட்டி. தினம் தினம் சேவித்த ராமானுஜரின் பாதங்களை தன் கண்ணுக்குள் நிலைநிறுத்தினாள். நீண்ட கால் விரல்கள், தான் தினந்தோறும் சேவிக்கும் பாதுகையின் அளவுக்குப் பொருத்தமான திருவடிகள் எங்கே இருக்கின்றன என்று கண்களை கீழே வைத்துத் தேடினாள்.

பல பேரது திருவடிகளைப் பார்த்து இல்லை இல்லை என்று கூறி வந்த கொங்கில் பிராட்டி...சட்டென்று ஒரு இடத்தில் அப்படியே நின்றாள். அந்த திருவடிகள் அவளை நகர விடவில்லை.

இதோ... இந்தத் திருவடிகள்தான் என் ஆச்சாரியரின் திருவடிகள் என்று முகம் மலர்ந்தவள் மேலே பார்த்தாள். ஆனால், அந்த வைணவரோ வெள்ளை உடை உடுத்தி சன்னியாசிக்கு உரிய திரிதண்டம், கொடி இல்லாமல் இருந்தார்.

ஆனால் கண்களில் நீர் சொரிய சொன்னாள் கொங்கில் பிராட்டி. ‘’என் ஆச்சாரியர் ராமானுஜரின் திருவடிகள்தான் இவை. ஆனால் என்னவென தெரியவில்லையே.... என் ஆச்சாரியர் காஷாயம் உடுத்தியிருப்பார். ஆனால் நான் பார்த்த அந்த குருநாதர் போல் இவர் இல்லையே. அந்தப்பெரியவருக்கு இருந்த த்ரிதண்ட காஷாயங்கள் இந்த பெரியவரிடம் காணப்பட வில்லையே? திருவடிகள் என் ஆச்சாரியர்தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் காஷாயமற்ற திருமேனியும், சங்குசக்கர திருமண் கொடி இல்லாத திருத்தோள்களும் என்னை சஞ்சலப்படுத்துகின்றனவே...?” என்று துடித்தார் கொங்கில் பிராட்டி்.

இதற்கு மேலும் ராமானுஜர் அவரை சோதிக்க விரும்பவில்லை. தன் கைகளை உயர்த்தி கொங்கில் பிராட்டியை ஆசீர்வதித்தவாறே...

‘கொங்கில் பிராட்டி அடியேன் தான் ராமானுஜன். நீ என் திருவடிகளை வைத்து உறுதிப்படுத்தியதன் மூலம் உமது சரணாகதி தெரிந்தது. திருவரங்கத்தில் இருந்துதான் வருகிறேன். ஆனால்... சில தடைபாடுகளால் காஷாயம் களைந்து திரிதண்டம் மறைத்து, வெள்ளை உடை உடுத்தி பயணம் மேற்கொண்டிருக்கிறேன். உன் பக்தி என்னை மெச்சுகிறது’’ என்று சொல்ல கொங்கில் பிராட்டிக்கு ஏகப்பட்ட சந்தோஷம். பக்தி பரவசமாக அவர் எம்பெருமானாரை மீண்டும் வணங்கினார்.

‘சுவாமி... தங்கள் திருவடிகளைத் தவிர வேறு எதையும் நினைக்காதவள் நான். அதனால்தான் இத்தனை வருடங்கள் கழித்தும் தங்கள் திருவடிகளை என்னால் கண்டறிந்து உணரமுடிந்தது’ என்றாள்.

‘உமது பக்தியை மெச்சி நீ சமைத்த அமுதையே உண்ணுகிறேன்’ என்றார் ராமானுஜர். தனது ஆச்சாரியருக்கும் மற்ற சிஷ்யர்களுக்கும் அந்த மலையோர குடிலில் அறுசுவை விருந்து பரிமாறினாள் கொங்கில் பிராட்டி.

அங்கே நான்கு நாட்கள் தன் சிஷ்யர்களோடு தங்கினார் ராமானுஜர். திருவரங்கத்தில் இருந்து வெள்ளை உடை உடுத்தி வந்த ராமானுஜர், கொங்கில் பிராட்டியின் குடிலில் இருந்து புறப்படும்போது தனது வழக்கமான வஸ்திரமான காஷாயத்துக்கு மாறினார்.

சிஷ்யர்கள் கேட்டார்கள். ‘ஏன் சுவாமி... அவசரப்பட்டு இப்போதே காஷாயத்தை அணிய வேண்டும். இன்னும் கொஞ்சம் அவகாசம் எடுத்துக் கொள்ளலாமே?’ என்று. அதற்கு ராமானுஜர் என்ன பதிலளித்தார் தெரியுமா?

பாதுகைகளை சேவித்து வந்த கொங்கில் பிராட்டி போல பாசுரங்களை மட்டுமே சேவித்து வரும் பூரண பக்தர்தான் ஆழ்வார்கள் ஆய்வு மைய நிறுவனர் வைணவச் செம்மலான ஜெகத்ரட்சகன். அவரது பாசுரப் பயணம் ஆழ்வார்களை பல தூர தேசங்களுக்குக் கொண்டு போய் சேர்த்திருக்கிறது.

ஆழ்வார்கள் ஆய்வு மையம் வளரட்டும்... ராமானுஜர் புகழ் ஓங்கட்டும்!

விளம்பர பகுதி

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon