மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 19 செப் 2020

ஆம்பூர்: 3ஆவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்!

ஆம்பூர்: 3ஆவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்!

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 3ஆவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வெங்கட சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட அத்திமா குலப்பள்ளி என்ற கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.45 மணியளவில் 3 முறை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் முறை லேசான அதிர்வும், 2-வது முறையாக அதிக அதிர்வும், 3-வது முறை ஏற்பட்ட நில அதிர்வால் தரை நழுவி செல்வது போலவும் இருந்ததுள்ளன. இதைத் தொடர்ந்து நள்ளிரவு 1 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் மக்கள் தெருக்களில் தஞ்சமடைந்தனர்.

இந்நிலையில் நேற்று (அக்டோபர் 22) இரவு சுமார் 8.45 மணிக்கு மீண்டும் அதிக சத்தத்துடன் கூடிய நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்திமாகுலப்பள்ளியில் உள்ள ராமர் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, ஓம்சக்தி கோவில் தெரு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நில அதிர்வை உணர்ந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் இரவு முழுவதும் வீதிகளிலேயே தங்கினர்.

ஒரே பகுதியில் 3ஆவது முறையாகத் தொடர்ந்து நில அதிர்வு ஏற்பட்டுள்ளது குறித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon