மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 10 ஆக 2020

குளிர்காயும் தமிழக அரசு - அப்டேட் குமாரு

குளிர்காயும் தமிழக அரசு - அப்டேட் குமாரு

தப்பு செஞ்சவனை தண்டிக்காத சட்டங்களும், அதை சரியா கடைபிடிக்க அதிகாரிகளும் இருந்த காலமெல்லாம் நம்ம டைம்லைன்ல நடக்காது போல. மக்களுக்காக இயங்க வேண்டிய வங்கிகளை தனியார் மயமாக்கி, ஒவ்வொருத்தனையும் கந்துவட்டிக்காரன் பக்கம் தள்ளிவிட்டுட்டு இன்னைக்கு தீக்குளிச்சு இறந்து போனதும் அரசு சார்புல சில லட்சங்களை அந்த உயிர்களுக்கு விலை பேசப்போறீங்க. அப்பறம் என்ன செய்வீங்க? இறந்து போன இரண்டு குழந்தைகளும் படிப்புக்கு பல லட்சங்களை செலவு செய்து, வேலைக்கு போய் பல லட்சங்களை சம்பாதிச்சிருக்கும். அதையெல்லாம் இந்த அரசாங்கம் வட்டி இல்லாம இன்னைக்கே சில லட்சங்கள்ல செட்டில் பண்ணும். அப்ப, கந்துவட்டிக்கு பணம் கொடுத்தவங்களுக்கும், அரசாங்கத்துக்கும் என்ன வித்தியாசம்? எதிர்க்கட்சியெல்லாம் குற்றவாளிகளை தண்டிக்க வலியுறுத்தும். அமைப்புகள் களமிறங்கி போராட்டம் நடத்தும். சமூக ஆர்வலர்கள் தீ குளிப்பு மற்றும் தற்கொலை பற்றிய விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துவாங்க. இதுதான இத்தனை வருஷமா ஸ்கிரிப்டு எழுதி வெச்ச மாதிரி தமிழ்நாட்டுல நடந்துக்கிட்டு இருக்கு. விவசாயக் கடன்ல இருந்து, பேங்க் லோன் வரைக்கும் இது தான் காலம்காலமா நடந்துக்கிட்டு இருக்கு. தீக்குளிப்பின் மூலம் தடுக்கப்பட்ட குற்றமோ, மனித உரிமை மீறல்களோ தமிழ்நாட்டுல ஏது.

Sonia Arunkumar

முன்னலாம் அரசியல்வாதிங்க மத்தவங்களை மிரட்ட ரவுடிங்களை விட்டு மிரட்டுவாங்க இப்பலாம் ஐடி ரெய்டு, ஜிஎஸ்டி ரெய்டு தான். டிஜிட்டல் இந்தியாடா

J Bismi

இண்டர்நெட்டில் மெர்சல் படம் பார்த்த எச் ராஜாவை கண்டித்ததற்காக விஷால் அலுவலகத்தில் ஐடி ரெய்டு... பிஜேபியின் சவக்குழி ஆழப்படுத்தப்படுகிறது.

Vidhya Vijayaraghavan

விஜய் கிறிஸ்தவனா இருக்கறது தான் உன் பிரச்சனைன்னா, அவர் மதத்தை வெச்சுத்தான் நீ அரசியல் செய்வேன்னா பிறப்பால் ஒரு இந்துவான நான் அவருக்கு சப்போர்ட் செய்வேன் டா. அவருக்கு விசில் அடிச்சு கைத்தட்டி உன் காவி வேட்டி கழண்டு போகற வரை 'ஜோசப் விஜய்' கூட நிப்பேன் டா. என்ன முடியுமோ பார்த்துக்கோ!

சங்கர பாண்டியன்

இப்ப விஷாலு அடுத்து நம்ம விஜைணா தானே..!

பெரியப்பா வச்சிட்டியே எங்கண்ணாவுக்கு பெரிய ஆப்பா..!

படித்ததில் பிடித்தது

குடி போதையில் சாலையோரத்தில் விழுந்து கிடந்தவனை லத்தியால் தட்டி எழுப்பிய அந்தக் கான்ஸ்டபிள் கோபத்துடன் கேட்டார்.

"ஏய்! தலைகால் புரியாம விழுந்து கெடக்கிறியே, எவ்வளவு குடிச்சே?"

"சார்! ஒரு ஃபுல் பாட்டிலயும் குடிச்சிட்டேன்."

“ஏன்யா... இப்படி நிதானம் தவறும் அளவுக்கா குடிப்பது? ஒரு லிமிட் வேணாம்?”

கேட்ட அந்த கான்ஸ்டபிளைப் பார்த்து வருத்தத்துடன் சொன்னார்.

“நெலம அப்படி சார். குடிக்க வேண்டிய கட்டாயம் ஆகிப் போச்சு.!”

சொன்னவன் முகத்தில் தெரிந்த வருத்தத்தைப் பார்த்த கான்ஸ்டபிள் சற்றே தனிந்த குரலில் கேட்டார்.

“அப்படி என்ன கட்டாயம்.?”

கான்ஸ்டபிள் கேட்டதும் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் அவரைப் பார்த்துச் சொன்னார்.

பாட்டில் மூடி தொலஞ்சி போச்சு... சார்.!”

Boopathy Murugesh

விஷால் ஆபிஸுக்கு ரெய்டு போனது உண்மைல வருமான வரித்துறை தானா? அதுவேற Tamilrockers அட்மின் போய் இதுவரை ஷூட் பண்ண அடுத்த படத்து சீன்ஸ எடுத்து ரிலீஸ் பண்ணிட போறான்..

ஊ. இரமேஷ் குமார்

இல்லாதவர்கள் உயிருடன் நெருப்பில் எரியும் பிணங்கள் ஆகிவிட்டோம் பணம் என்பது வாழ்வதற்கு மட்டுமே என எண்ணியிருந்தேன் இப்போதல்லாம் பலர் உயிர் பறிக்க முதல் காரணம் பணம். உழைப்பவன் உயர்ந்தால் நாடு செழிக்கும் இங்கேயோ சுரண்டுபவனையும் திருடுபவனையும் இந்த அரசும் ஆட்சியர்களும் உயர்த்திக்கொண்டு இருக்கின்றனர் எப்படி உயர்வான் எளியவன்...???

Karur Kittu

இடம் மாற்றத்தை தவிர வேறென்ன அந்த காக்கி கைநீட்டிகளுக்கு தண்டனையாக தரப்போகிறது இந்த அரசாங்கம்?

Thippu Sulthan K

எல்லாரும் GST ரயிடுன்னா என்னான்னு கண்பீசுல இருக்காங்கே..

வீட்டுல இருக்குற பிரிஜு டிவி டிவிடி பிளேயர் எல்லாம் வரி கட்டி வாங்குனதான்னு செக் பண்ணுறவங்க..

காலைல ஹோட்டல்ல தின்ன தோசை பில்லு எங்க பிரதர்

Thanikachalam Thanika

திருட்டு விசிடி ல படம் பாத்தவன புடிங்கடானா, பார்த்தது தப்புனு சொன்னவன அடிக்கிறானுங்க

Shinu Vincent

விஜய் கிறிஸ்தவர்னு ஊருக்கே தெரிஞ்ச விஷயத்த பெருசா பகிரங்கபடுத்தறதா நெனச்சு வோட்டர் ஐடி ரிலீஸ் பண்ணிருக்கார்..

பிரியாணில இருந்து ஒருத்தரோட பெர்சனல் டேட்டா வரைக்கும் திருடியேதான் பொழப்ப ஓட்டுவாய்ங்க போல.

Prince Prinkypas

நேற்று பாஜக தலைவரை எதிர்த்து அறிக்கை விட்ட விசால் அலுவலகத்தில் இன்று வருமானவரி சோதனை இடுகிறார்களே... பழி வாங்கும் நடவடிக்கை என்று மக்கள் நினைக்க மாட்டார்களா??

எங்களை எதிர்த்தால் இப்படித்தான் செய்வோம்.. பொத்திகிட்டு உட்காரு என்று சொல்ல வருகிறார்களோ என்னவோ..

Thippu Sulthan K

விஷாலு :என்னய்யா வீட்டு முன்னாடி எழுமிச்சம் பழத்த நறுக்கி வீசிட்டு தேங்கா ஒடக்கிறீங்க ..

மொத மொறையா தமிழகத்துல GST ஆப்பிசருங்க ரயிடுக்கு வாரோமுங்க எல்லாம் நல்ல படியா முடியனும்னு தான்

Umamaheshvaran Panneerselvam

வங்கிக்கடன் ரத்து தவறு, அரசு வங்கிகள் வேலை செய்வதில்லை, தனியார் வங்கிகள் வேண்டும் என்று எல்லாம் எழுதிய எந்த தே.ப க்கும் கந்து வட்டிக்கு எதிராக பேச தகுதியில்லை.

தே.ப : தேச பக்தர்

Senthil K Nadesan

குறைந்த பட்சம் "இவன்தான் அந்த கந்துவட்டிக்காரன்"ன்னு அவன் போட்டோவ புடிச்சு போடுங்க மக்கா..... பச்ச புள்ள எரியுற படத்த போட்டு இரக்கப்பட்றேன்னு உங்க ஈர மனசோட கோர முகத்தை காட்டாதீங்க....

சகிக்கல....

கா. விஜய் ஆனந்த்

ஒரு மாவட்டஆட்சியர் பவர் என்னனு தெரியாம, மாவட்ட ஆட்சியர் எல்லாம் முதல்வரின் ஆணைக்கிணங்கன்னு கோஷம் போட்டதோட பலன் இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி இருக்கு...

இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலிகள்...

Boopathy Murugesh

அப்பா சொன்னதும் பெட்ரோல் ஊத்தி, தீ வச்சுகிட்ட அந்த குழந்தைகள் அப்பா மேல வச்ச நம்பிக்கைல பாதி அவருக்கு அவர் மேல இருந்திருந்தா வாழ்ந்திருக்கலாம்..

Nelson Xavier

தமிழ்ச் சமூகம் ஏதேனும் ஒரு வெப்பத்தை எப்போதும் ரசித்துக் கொண்டேயிருக்கிறது. அலுவலகம், பேருந்து, டீ கடை, மருத்துவமனை, நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் ஒரே கேள்விதான்.

" பார்த்தாச்சா ! "

Vel Kumar

கிட்டத்தட்ட அதே வயதை உடைய இரு குழந்தைகளின் தகப்பனாக அந்த பிஞ்சுகள் மேல் பற்றியெரியும் தீ என் மீது எரிவது போலவே இருக்கிறது....!

சித்தன் ஆனந்த்குமார்

நீ பெற்ற பிள்ளை என்பதற்காக உனக்கு அதை கொல்ல உரிமை இல்லை..

நீ கட்டிய மனைவி என்பதற்காக அவளை கொல்ல உனக்கு உரிமை இல்லை..

உன் உயிர் என்பதற்காக உனை கொல்ல உனக்கே உரிமை இல்லை..

கடன் வாங்கியது ஒருவன்.. சாவது குழந்தைகள்..

தன் குழந்தைகளை கொல்லும் பொறுப்பில்லாத மனிதன் எல்லாம் கடன் ,

அதுவும் கந்து வட்டியில் வாங்குவது எல்லாம் அவனின் தவறே..

இதில் அரசு, அதிகார லஞ்சம் எல்லாம் இரண்டாம் குற்றம் தான்

நந்தகுமார் மாணிக்கம்

இந்த கந்து வட்டியில் பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன், ஆறு வருடம் முன்பு பிஸ்னஸ் பண்ணும் போது வாங்கிய ஐந்து லட்சத்திற்கு மூன்று மடங்கு வட்டிகட்டி இருந்த எல்லாவற்றையும் விற்று வெளியே வந்தது பெரிய கதை, வாங்கும் போது இனிக்கும் அப்புறம் போகப்போக உயிரையே எடுக்கும்.

கந்து வட்டி & மீட்டர் வட்டி.

PG Saravanan

தீயே!

தீயே!

ஏழையர்

எம்மவர்

நல்லுயிர்

நசித்து

ஏன்

புசித்தாய்?

தீவினை

புரிந்தோர்

திம்மென்றிருக்க

எளியவர்

நால்வரை

ஏன்

எரித்தாய்?

தீயே!

தீயே!

இஃது

தீதென்று

அறியாயோ!

ஐயோ!

ஐயோ!

அறம்

விலகி

நின்றாயே!

-லாக் ஆஃப்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon