மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 8 ஆக 2020

கட்சிப் பகையால் மக்களை வஞ்சிக்கும் முதல்வர்!

கட்சிப் பகையால் மக்களை வஞ்சிக்கும் முதல்வர்!

அதிமுக அம்மா அணியில் முக்கியப் பங்கு வகிக்கும் முன்னாள் அமைச்சரும் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பழனியப்பன் தொகுதியில் மக்கள் பணிசெய்வதற்கு தடைவிதித்து அதிகாரிகள் மூலமாக முதல்வர் மிரட்டுவதாகக் கூறுகிறார் பழனியப்பன்.

தேர்தலில் சின்னமே இல்லாவிட்டாலும் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்ளப் பல நலத் திட்டங்களைச் செய்துவரும் பழனியப்பன், விவசாயிகளின் நண்பனாக விவசாயிகளின் பிரதான கோரிக்கையான, ஏரி, பாசன வாய்க்கால், குளங்களைத் தூர்வாரும் பணியில் ஈடுபட்டுவந்தார். அந்தப் பணிகளுக்கு திடீரென்று முட்டுக்கட்டை போடப்பட்டது பற்றி மின்னம்பலம்.காமிடம் பகிர்ந்துகொள்கிறார்.

“முதல்வருக்கும், எனக்கும் தனிப்பட்ட பிரச்சினை இல்லை, பல போராட்டங்களுக்கும் மத்தியில், பழனிசாமியை முதல்வர் பதவியில் அமரவைத்தது சின்ன அம்மாதான் என்பது உலகத்துக்கே தெரியும் இப்போது அவரே சின்ன அம்மாவுக்கு எதிராக இருக்கிறார். நான் நன்றியுடன் சின்ன அம்மா அணியிலிருப்பதுதான் முதல்வருக்கு என் மீதுள்ள கோபம்” என்று சொல்பவர், தனது பணிகளைப் பற்றி விளக்குகிறார்.

“பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் விவசாயிகள் செழிக்க, அரசு செய்ய வேண்டிய மாபெரும் வேலைகளை நான் செய்துவந்தேன், மலைப் பகுதியிலிருந்து விளைநிலங்களுக்கு வரும் பாசனவாய்க்கால் சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரியுள்ளேன், தொகுதியில் ஏரி, குளங்கள் மொத்தம் 80இல் 48 ஏரி, குளத்தைத் தூர்வாரி பணிகள் முழுமையாக முடிந்து, அடுத்த குளத்தைத் தூர்வாரும் பணியைத் துவங்கும்போதுதான் மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன் மூலமாகத் தூர்வாரும் பணிகளுக்கு தடைபோட்டார். 150 கிலோமீட்டர் தூரம் பாசன வாய்க்கால் தூர்வாரியதும், 48 குளங்கள், ஏரிகள் தூர்வாரியதும், முதல்வருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தெரியாதா? அரசியல் பகைக்காக மக்கள் பணியை முடக்கலாமா, தூர்வாரும் பணியை முடக்கம் செய்த மாவட்ட ஆட்சியரும் முதல்வரும் என் தொகுதியில் வந்து ஏரி, குளங்களைத் தூர்வாரி விவசாயிகளை வாழவைக்கச் சொல்லுங்கள். தயவுசெய்து விவசாயிகளை அழிக்க வேண்டாம்” என்று சொல்கிறார் பழனியப்பன்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon