மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

மெர்சல் புதிய சர்ச்சை: விஜய் மீது புகார்!

மெர்சல் புதிய சர்ச்சை: விஜய் மீது புகார்!

மெர்சல் படத்தில் வழிபாட்டுத் தலங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து இடம்பெற்றுள்ளதால் நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் தீபாவளி அன்று வெளியாகி அரசியல் சர்ச்சைகளுக்கு இடையே ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது மெர்சல் திரைப்படம். இப்படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் மத்திய அரசின் திட்டங்களைக் கிண்டல் செய்வதாக பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த பிரச்சினை தேசிய அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது.

இந்த பிரச்சனை தற்போது ஒரு முடிவை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக புதிய பிரச்சனை ஒன்று கிளம்பி இருக்கிறது. மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார், அண்ணாநகர் காவல் நிலையத்தில் ‘மெர்சல்’ படம் குறித்து புகார் மனு கொடுத்துள்ளார். அதில் அவர், "மெர்சல் திரைப்படத்தில் வழிபாட்டுத் தலங்களை கொச்சைப்படுத்தும் வகையில் வசனங்கள் உள்ளன. எனவே நடிகர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon