மின்னம்பலம் மின்னம்பலம்
ஞாயிறு, 5 ஜூலை 2020

பிரபாஸ்: பர்த்டே ஸ்பெஷல்!

பிரபாஸ்: பர்த்டே ஸ்பெஷல்!

சரித்திரப் படங்களுக்கு வசனங்கள் மூலம் உயிர் கொடுத்துவந்த சினிமாக்களுக்கு மத்தியில் பிரம்மாண்டமாக உருவான பாகுபலி படத்திற்குத் தன் நடிப்பாலும், உடல் மொழியாலும் வலு சேர்த்தவர் பிரபாஸ். பாகுபலி, பாகுபலி 2 படங்களால் உலகம் முழுதும் அறியப்பட்ட பிரபாஸின் பிறந்த தினம் இன்று (அக்டோபர் 23). அவரின் பிறந்தநாளை முன்னிட்டு 'சாஹோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக் குழு வெளியிட்டிருக்கிறது.

பிரபாஸ் 'பாகுபலி 2' படத்தைத் தொடர்ந்து 'சாஹோ' படத்தில் நடித்துவருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் இப்படம் உருவாகிவருகிறது. ஷ்ரத்தா கபூர், நீல் நிதின் முகேஷ், அருண் விஜய் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குநராக சாபு சிரில், இசையமைப்பாளராக சங்கர் -இசான் - லாய் ஆகியோர் பணிபுரிந்துவருகிறார்கள்.

சமூக வலைதளங்களில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பிரபாஸுக்குத் தங்களுடைய பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்துவருகிறார்கள். அவரது பிறந்தநாள் கொண்டாட்டமாக சுஜித் இயக்கத்தில் அவர் நடித்துவரும் 'சாஹோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கைப் படக் குழு வெளியிட்டுள்ளது. இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

'பாகுபலி' படத்தைப் போலவே பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்துவருகிறார்கள்.

சாஹோ போஸ்டர்

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon