மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 7 ஜூலை 2020

வளர்ச்சியில் இந்தியச் சுற்றுலாத் துறை!

வளர்ச்சியில் இந்தியச் சுற்றுலாத் துறை!

இந்தியச் சுற்றுலாத் துறை 2.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து அசோசெம் மற்றும் யெஸ் வங்கி இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில், "இந்தியச் சுற்றுலா மற்றும் பயணிகள் துறை 2.5 சதவிகித வளர்ச்சியைத் தக்கவைத்துள்ளது. அதிகபட்ச நிதி ஒதுக்கீடு, சுகாதார நல வசதிகளுக்கான குறைந்தபட்ச செலவு போன்றவையே இத்துறையின் வளர்ச்சிக்குக் காரணம். 2016ஆம் ஆண்டு இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) பயணிகள் மற்றும் சுற்றுலாத் துறையின் மதிப்பு 208.9 பில்லியன் டாலர்கள். அதாவது மொத்த ஜி.டி.பி.யில் இதன் பங்கு 9.6 சதவிகிதமாகும். சுற்றுலாத் துறைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது அவசியம்" என்று கூறப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டில் இந்தியாவிற்கு 80 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன் அளவு 2007 முதல் 2015ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் 6 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon