மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 16 ஜன 2021

மோடி பார்த்துக்கொள்வார் என்று கூறினேனா?

மோடி பார்த்துக்கொள்வார் என்று கூறினேனா?

தமிழக வளர்ச்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் மோடி உள்ளவரை பயம் இல்லை என்ற அர்த்தத்தில்தான், நான் மோடி பார்த்துக்கொள்வார் எனக் கூறினேன் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நடைபெற்ற உட்கட்சி குழப்பங்களுக்கு காரணம் பாஜகதான் என்றும், தமிழக அரசை மத்திய பாஜக அரசு பின்னின்று இயக்குகிறது என்றும் பல்வேறு அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் அதிகளவில் நிதி கிடைக்கும், தமிழக அரசு கட்டுப்படுத்தவில்லை என்று அமைச்சர்கள் கூறி வந்தனர். பாஜக தலைவர்களும் இதையே தெரிவித்து வந்தனர்.

இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரியகுளத்தில் நடைபெற்ற அதிமுகவின் 46வது

வருட தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திரபாலாஜி,"பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்கு ஆதரவாக உள்ளார். அதிமுகவுக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும் பிரதமர் மோடி பார்த்துக்கொள்வார். மோடி இருக்கும்வரை நம்மை யாரும் மிரட்ட முடியாது. இரட்டை இலை யாருக்குக் கிடைக்கிறதோ அதுதான் உண்மையான அதிமுக. மோடி இருக்கும்வரை அதிமுக கட்சியும் சின்னமும் நம்மிடம்தான் இருக்கும்" என்று பேசினார். அமைச்சர் பேச்சு, தமிழக அரசை பாஜக பின்னின்று இயக்குவதை உறுதிப்படுத்துவதாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று ( அக்டோபர் 23) சிவகாசியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா புகைப்படக் கண்காட்சியை திறந்துவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி," தமிழகத்தின் வளர்சிக்கும், இந்தியாவின் முன்னேற்றத்திற்கும் மோடி உள்ளவரை பயம் இல்லை என்றுதான் கூறினேன். கட்சியைப் பாதுகாக்க, சின்னத்தை மீட்க வேண்டும் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை. அ.தி.மு.க தயவில் பா.ஜ.க இருக்கவேண்டிய அவமியமில்லை" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon