மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 28 செப் 2020

நவம்பரில் `அவள்' வருகிறாள்!

நவம்பரில் `அவள்' வருகிறாள்!

தரமணி படத்திற்குப் பிறகு சித்தார்த்துடன் ஹாரர் த்ரில்லரில் களமிறங்கியுள்ளார் ஆண்ட்ரியா. சஸ்பென்ஸாக உருவாகி வந்த அவள் திரைப்படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதை அடுத்து தற்போது ரிலீஸுக்கு தயாராகி உள்ளது. நவம்பர் 3 ஆம் தேதி இதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. இந்தியில் `தி ஹவுஸ் நெக்ஸ்ட் டோர்' எனவும், தெலுங்கில் `குருஹம்' எனவும், தமிழில் `அவள்' என்ற பெயரிலும் வெளியாக உள்ளது. சிரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், கிரிஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்துள்ளனர்.

ஒரு வீட்டைச் சுற்றியே நடைபெறும் மர்மங்களைச் சொல்லும் இப்படத்தின் கதையானது ஒரு உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சித்தார்த்தும் ஆண்ட்ரியாவும் கணவன் மனைவியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் வீட்டுக்கு அருகில் புதிதாக குடிபுகும் மற்றொரு குடும்பத்தால் உண்டாகும் தொந்தரவுகளை ஹாரர் த்ரில்லரில் சொல்லியிருக்கிறார்கள். சித்தார்த்தின் எடாகி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனமும், வியாகம் 18 மோஷன் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

ஆண்ட்ரியாவை பின்தொடர்ந்து பயமுறுத்தும் அந்த மர்ம பெண் யாரென்பது நவம்பரில் தெரிந்து விடும்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon