மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 18 செப் 2020

உதான் திட்டத்தில் புதிய விமானச் சேவை!

உதான் திட்டத்தில் புதிய விமானச் சேவை!

ஏர் ஒடிசா நிறுவனம் உதான் திட்டத்தின் கீழ் வருகிற நவம்பர் மாத இறுதியில் புதிதாக நான்கு விமானச் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவனேஷ்வரைச் சேர்ந்த ஏர் ஒடிசா நிறுவனம் அகமதாபாத் முதல் பவநகர், ஜாம்நகர், டையு மற்றும் முத்ரா ஆகிய நகரங்களுக்கு நான்கு புதிய விமானச் சேவைகளை உதான் திட்டத்தில் இந்த மாத இறுதியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உதான் திட்டத்தில் 6 விமானச் சேவைகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்திற்கு 50 வழித்தடங்களில் விமானங்களை இயக்க மத்திய அரசின் ஒப்புதல் உள்ளது. உதான் திட்டத்தில் உள்நாட்டு விமானச் சேவைகளை மேம்படுத்தவும், இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர நகரங்களுக்கும் விமானச் சேவையை இயக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையிலேயே தற்போது ஏர் ஒடிசா நிறுவனம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக டெல்லி, சென்னை ஆகிய நகரங்களுக்கும் உள்நாட்டு விமானச் சேவையை அளிப்போம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் கூறியுள்ளதாவது: 'டெல்லி, அகமதாபாத், புவனேஷ்வர் மற்றும் சென்னை, குஜராத், உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, சட்டிஸ்கர், ஜார்க்கண்ட், ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களுக்கும் உதான் திட்டத்தில் விமான சேவையை இயக்குவோம்'. அதிகரித்தும் வரும் இந்திய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கையைச் சமாளிக்க விமானத் துறையில் ரூ.4 லட்சம் கோடி வரை தேவைப்படுவதாக அண்மையில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon