மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 21 அக் 2020

டெய்லர் ஸ்விஃப்ட் : ரசிகர்களை கவர புதிய உத்தி!

டெய்லர் ஸ்விஃப்ட் : ரசிகர்களை கவர புதிய உத்தி!

பிரத்யேக புகைப்படங்களை வெளியிடவும், தனது ரசிகர்களுடன் நேரடியாக பேசவும் ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட்.

உலகளவில் தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருப்பவர் பாப் பாடகி டெய்லர் ஸ்விஃப்ட். இவர் தற்போது மற்ற முன்னணி பாடகர்களை போன்று தனக்கென ஒரு பயன்பாட்டு செயலியை (ஆப்) உருவாக்கியுள்ளார். ‘தி ஸ்விஃப்ட் லைஃப்’ எனப்படும் இந்த செயலியை ‘குளு’ என்ற முன்னணி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.

இந்த ஆப் வாயிலாக டெய்லர் ஸ்விஃப்ட்டின் பிரத்யேகமான புகைப்படங்கள், பாடல்கள், இமோஜி ஸ்டிக்கர்ஸ் மற்றும் தரவுகளை ரசிகர்கள் பெறமுடியும். மேலும், ஸ்விஃப்ட்டுடன் நேரடியாக உரையாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆப் குறித்து டெய்லர், “இந்த ஆப் என் ரசிகர்களாகிய உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். இதை அனைவரும் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கேட்டி பெர்ரி பாப், பிரிட்னி ஸ்பியர்ஸ், நிக்கி மினாஜ், என்று பல பிரபலங்கள் தங்களுக்கென்று பிரத்யேக ஆப் உருவாக்கி அதன்மூலம் வருமானம் ஈட்டிவரும் நிலையில் தற்போது டெய்லர் ஸ்விஃப்ட் இந்த புதிய ஆப்பை அறிமுகப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon