மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 24 செப் 2020

வாட்ஸ் அப்பில் குரூப்கால்!

வாட்ஸ் அப்பில் குரூப்கால்!

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமான வாட்ஸ் அப், 2009ஆம் ஆண்டு முதல் அதன் வாடிக்கையாளர்களுக்கு செய்திகளை இலவசமாகப் பகிர்ந்து கொள்ளும் வசதியை வழங்கி வருகிறது. முன்பெல்லாம் ஒரு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டுமென்றால் நாம் பயன்படுத்தும் நெட்வொர்க்குகளில் அதற்கென தனியாக பணம் செலுத்த வேண்டியிருந்தது. வாட்ஸப் பயன்படுத்த இன்டர்நெட் வசதி மட்டுமே போதுமானதாக இருப்பதால் இதன் வருகைக்குப் பிறகு நெட்வொர்க்கில் குறுஞ்செய்தி அனுப்புவது முற்றிலும் குறைந்து விட்டது. இதில் செய்திகள் மட்டுமல்லாமல் போட்டோக்கள், வீடியோக்கள் அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் அடுத்தடுத்த அப்டேட்களில் வாய்ஸ்-கால் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குரூப் வாய்ஸ்-கால் வசதியை தற்போது அறிமுகம் செய்யவுள்ளதாக வாட்ஸப் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஒரு குரூப்பில் உள்ள அனைத்து நபர்களிடமும் ஒரே நேரத்தில் இலவசமாகப் பேசிக்கொள்ள முடியும். முன்னதாக இந்த சேவை பேஸ்புக் நிறுவனத்தின் மெஸஞ்சர் ஆப்-ல் அறிமுகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு படைப்பான வாட்ஸப்பிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதுகுறித்து WaBetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், " வாட்ஸப்பின் 2.17.70 iOS அப்டேட்டில் குரூப்-கால் வசதி அறிமுகம் செய்யவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ்-கால் சேவையை வழங்கியுள்ளோம். அதனைத் தொடர்ந்து தற்போது குரூப்-கால் வசதியை அறிமுகம் செய்யவுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon