மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 22 செப் 2020

2.0 பணிகளை முடித்த ஏமி ஜாக்சன்!

2.0 பணிகளை முடித்த ஏமி ஜாக்சன்!

‘2.0 படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன’ என்று நடிகை ஏமி ஜாக்சன் தெரிவித்துள்ளார் .

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் படம் 2.0. ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் சுமார் ரூ.400 கோடியில் உருவாகிவரும் 2.0 படத்தில் ஒரே ஒரு பாடல் மட்டும் படமாக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

மும்பையில் உள்ள ஒரு ஸ்டூடியோவில் படமாக்கப்பட்ட அந்தப் பாடல் காட்சிகளை முடித்தபின் ஏமி ஜாக்சன் நேற்று (அக்டோபர் 22) தன் ட்விட்டர் பக்கத்தில், “கடைசி இரண்டரை வருடங்களாக நடைபெற்ற 2.0 படப்பிடிப்பு ஒரு ரோலர் கோஸ்டரைப் போல் ஓடி முடிந்துவிட்டன, எனினும் அதன் உழைப்பு விரைவில் திரையில் அதிரவைக்கப் போகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார். கடைசியாக எடுக்கப்பட்ட அந்தப் பாடலில் ஏமி ஜாக்சனுக்காக வித்தியாசமான ஆடைகளை ஷங்கர் வடிவமைக்க சொல்லியிருந்ததாகக் கூறப்பட்டது. இந்தப் பாடல் ரசிகர்களுக்குப் புதுமையான அனுபவத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் 27இல் துபாயில் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon