மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 16 டிச 2019

வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய விதிகள்!

வங்கிகளில் டெபாசிட் செய்ய புதிய விதிகள்!

பண மோசடி தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட புதிய திருத்தங்களின்படி இனிமேல் வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் தங்கள் அடையாள அட்டையை எடுத்துச்செல்ல வேண்டுமென்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கறுப்புப் பணம் ஒழிப்பு, சட்டவிரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு நடவடிக்கை என மத்திய அரசு தொடர்ந்து பணப் பரிமாற்றத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வங்கிகளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் அசல் ஆவணத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அந்த ஆவணத்தை வங்கி அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு மேலும் கூறியுள்ளதாவது: ‘தனிமனிதர் ஒருவர் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் டெபாசிட் செய்தாலோ அல்லது புதிய வங்கிக் கணக்கு தொடங்கினாலோ அசல் ஆவணத்தையும் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். வங்கி ஊழியர்கள் இதைச் சோதனை செய்ய வேண்டும். இது சிட் பண்ட்ஸ், கூட்டுறவு வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், வங்கி சாராத நிறுவனங்கள் என் அனைத்துக்கும் பொருந்தும்.

அதேபோல 10 லட்சத்துக்கு மேல் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பணங்களின் பரிவர்த்தனைகளுக்கும் அசல் ஆவணங்களை அளிக்க வேண்டும். இதன் மூலம் போலி ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் செய்யப்படுவது தடுக்கப்படும்’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon