மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 9 ஆக 2020

உணவுப்பொருள் ஏற்றுமதிக்குத் திட்டம்!

உணவுப்பொருள் ஏற்றுமதிக்குத் திட்டம்!

வேளாண் மற்றும் உணவு பதப்படுத்தல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (ஏ.பி.இ.டி.ஏ) வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பொருள்களை வங்கதேசம் மற்றும் மியான்மரில் சந்தைப்படுத்துதலை அதிகரிப்பதற்கான திட்டத்தை எடுத்து வருகிறது.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏ.பி.இ.டி.ஏ. அமைப்பு வங்கதேசம் மற்றும் மியான்மரில் ஹை கமிஷன் ஆஃப் இந்தியா மற்றும் யங்கூன் தூதரகத்துடன் இணைந்து இந்த நிகழ்வுகளை ஒருங்கிணைந்துள்ளது. மேற்கண்ட இரு நாடுகளுக்கும் உணவுப்பொருள் ஏற்றுமதியை ஊக்குவிப்பது தொடர்பாக இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் முதல் நிகழ்வு மியான்மரில் நவம்பர் மாதத்திலும், இரண்டாம்கட்டமாக வங்கதேசத்தில் டாக்கா மற்றும் சில்ஹெட்டில் டிசம்பர் முதல் வாரத்திலும் நடைபெறுகிறது.

2016-17ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து வங்கதேசத்துக்கு 396.44 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவுப்பொருள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அரிசி, காய்கறிகள், பழங்கள், கோதுமை, பால் பொருள்கள் மற்றும் பருப்புகள், சோளம் ஆகியவை கடந்த நிதியாண்டில் வங்கதேசத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களாகும். அதேபோல மியான்மர் நாட்டுக்குக் கடந்த நிதியாண்டில் 24.15 மில்லியன் டாலர் மதிப்பிலான உணவுப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மியான்மருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதில் அரிசி, பழங்கள், காய்கறிகள், சோளம், தானியங்கள் போன்றவையே அதிகமாகும்.

வடகிழக்கு மாநிலங்களில் உற்பத்தியாகும் உணவுப்பொருள்களை வரும் ஆண்டுகளில் கடந்த ஆண்டைவிட கூடுதலாக ஏற்றுமதி செய்யவே வங்கதேசம் மற்றும் மியான்மரில் இந்த நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் மூலம் இரு நாடுகளும் இந்தியாவில் இருந்து உணவுப்பொருள்கள் ஏற்றுமதியை அதிகரிக்குமானால் விலை வீழ்ச்சியில் இருந்து வடகிழக்கு மாநில விவசாயிகளை மீட்டெடுக்க இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon