மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

பொடுகை விரட்டும் டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

பொடுகை விரட்டும் டிப்ஸ் - பியூட்டி ப்ரியா

கடவுள் செய்தால் திருவிளையாடல், குழந்தைகள் செய்தால் குசும்பு. அதே நாம் செய்தால் கொழுப்பு. இதென்னங்க நியாயம்? இதச் சொன்னா நம்மள... சரி வேணாம் விடுங்க.

“நாம ஏதாச்சும் க்ரீம் அல்லது ஷாம்புவெல்லாம் கேட்டா, வீட்ல ஆயிரம் கேள்வி கேட்பாங்க. கணக்கு சொல்லணும். பதில் சொல்லி மாளல... அதுக்கு இந்த பொடுகோடயே இருந்துடறேன் ப்ரியா” எனச் சலித்துக்கொள்ளும் தோழிகளுக்கு வீட்டிலிருக்கும் பொருள்களை கொண்டே பொடுகை விரட்டும் வித்தையைக் கையிலெடுப்போம் வாருங்கள்...

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் தலைமுடியின் வேர்க்கால்களில் பிஎச் அளவை அதிகரிக்கின்றன. அதனால் பூஞ்சைகள் தொல்லை குறைவதோடு, பொடுகையும் கட்டுப்படுத்துகிறது.

பேக்கிங் சோடா

ஈரமான தலைமுடியில், கை நிறைய பேக்கிங் சோடாவை எடுத்துக்கொண்டு தலையின் வேர்க்கால்களில் படும்படியாக, நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் தலையை அலசிக் கொள்ளலாம். இப்படி செய்யும்போது, ஷாம்புவைப் பயன்படுத்தக் கூடாது. பேக்கிங் சோடா பொடுகு தொல்லையை நீக்கும். பூஞ்சையைக் கட்டுப்படுத்தும்.

தேங்காய் எண்ணெய்

ஐந்து ஸ்பூன் அளவுக்குத் தேங்காய் எண்ணெயை எடுத்து, முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, நன்கு மசாஜ் செய்து இரவு முழுக்க விட்டுவிடவும். காலையில் எழுந்து, நல்ல தரமான ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.

எலுமிச்சை

இரண்டு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றினை எடுத்து வேர்க்கால்களில் இறங்கும்படி தேய்த்து மசாஜ் செய்யவும். அதன்பின் ஷாம்பு கொண்டு தலையை அலசிவிட்டு, மீண்டும் ஒரு கப் தண்ணீரில எலுமிச்சைச் சாற்றினைக் கலந்து, மீண்டும் தலையை அலச வேண்டும். இப்படி வாரத்துக்கு இரண்டு முறை செய்தாலே, பொடுகு தொல்லையிலிருந்து விடுபட முடியும்.

பூண்டு

பூண்டு பூஞ்சைகளை அழிக்கவல்லது. அதனால் பாக்டீரியாக்களால் உண்டாகும் பொடுகு தொல்லையையும் போக்கும். நன்கு துருவிய பூண்டை, தேனுடன் சேர்த்து கலந்து, வேர்க்கால்களில் தேய்த்து ஊறவிட்டு, பின்னர் தலையை அலசவும்.

இந்த எளிமையான வழிகளைப் பின்பற்றினாலே போதும். மிக விரைவில் பொடுகு தொல்லையில் இருந்து விடுபட முடியும்.

“கொளுத்தும் வெயிலில் நீ என்னைக் கடந்து போகும்போதெல்லாம்... எனக்கு சூரிய கிரகணமே” என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் வெளியே ஷாப்பிங் செல்லத் தயாராகிவிட்டாள் பியூட்டி ப்ரியா!

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon