மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 21 செப் 2020

சுக்கின் மருத்துவக் குணங்கள்: ஹெல்த் ஹேமா

சுக்கின் மருத்துவக் குணங்கள்:  ஹெல்த் ஹேமா

ஏக நிவாரணி என்றழைக்கப்படும் சுக்கில் உள்ள மருத்துவக் குணங்கள் பலரும் அறிந்ததே. ஆனால், அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துக்கூறாமல் மாத்திரைகளை மெடிக்கலில் ஏதாவது சொல்லி வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம்.

மனங்கள் மாறட்டும்... ஆரோக்கியம் சிறக்கட்டும்.

மருத்துவப் பயன்கள்:

* சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்துக்கு ஆறினதும், வலியுள்ள கை கால் மூட்டுகளில் பூசி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

* சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சைச் சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

* சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்து கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாள்களில் குணமாகும்.

* சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை அகலும்.

* சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

* சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

* சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

* சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

* சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

* சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாள்கள் குடித்துவர விஷக் காய்ச்சல் குறையும்.

என் வீட்டில் குடிநீரில் வெந்தயம் ஒருநாள், சீரகம் ஒருநாள், சுக்கு ஒருநாள் என்று போட்டுவைத்து குடிப்பதைப்பார்த்தே பலரும் அம்முறையை பின்பற்றுகின்றனர். வீட்டுக்கு வருவோருக்கு பாட்டில் தண்ணீரைக் கொடுப்பது கெளரவமாக இருக்கலாம். ஆனால், ஆரோக்கியமானது எது என நினைத்துப்பாருங்கள்... செயல்படுங்கள்.

திங்கள், 23 அக் 2017

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon